search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Separate accidents"

    • திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜீவன் ஆகாஷ் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளி ரத்தினம். சம்பவத் தன்று இவர் தனது மனைவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

    எம். சுப்புலாபுரம் எரிச்சநத்தம் நேரக்கோவில் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் சென்றது. இதனால் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளிரத்தினம் பரிதாபமாக இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையில் வந்து கொண்டிருந்த லாரி அவர் மீது மோதியது.
    • பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த சரலை ஏரி கருப்பராயன் கோவில் அருகே சம்பவ த்தன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்பொழுது சாலையில் வந்து கொண்டி ருந்த லாரி அவர் மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

    10 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

    இதேபோல் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சா லையில் பூவன்பாளையம் பிரிவு அருகே அடையாளம் தெரியாத நபர் ஓருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதி நிற்காமல் சென்றுவிட்டது.

    தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

    இறந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்கள்? போன்ற விவரம் தெரியவில்லை.

    இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுரையில் வெவ்வேறு விபத்துகளில் 2 வாலிபர்கள் பலியானார்கள்.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் நாகராஜ் (வயது 23). இவர் நண்பர்களுடன் ஒரு வேனில் சென்றார்.

    மேலூர் மெயின்ரோடு வளர்நகர் சந்திப்பு பகுதியில் சென்ற போது வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் வேனுக்குள் இருந்த ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டனர். இதில் 2 பேரின் தலைகள் பலமாக மோதி கொண்ட தால் நாகராஜ் மயங்கி விழுந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் வேனில் உடன் சென்ற டிரைவர்கள் யாகப்பா நகர் இந்திரா காலனியைச் சேர்ந்த பழனி மகன் சந்துரு (23), அருண கிரி கோவில் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் மணிகண்டன் (22) ஆகியோர் மீது போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிந்தாமணி மெயின் ரோடு மேல அனுப்பானடி சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த மதுரை கிழக்கு வி.ஏ.ஓ. சிவராமன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலி பரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் அவர் மீது மோதிய வாகனம் எது? வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×