search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shivarajkumar"

    • டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • போட்டி மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்தப் போட்டியில் வென்றாலோ அல்லது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டாலோ சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    ஆனால், பெங்களூரு அணி சென்னை அணியை விட குறைவான ரன்ரேட் வைத்துள்ளது. எனவே இன்று நடக்கும் போட்டியில் ஆர்.சி.பி. அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றாலோ அல்லது 18.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றியைப் பெற்றாலோ 4-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் ஆடி வருகிறது.

    இந்நிலையில், பெங்களூரு அணியின் ஜெர்ஸியில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சிவராஜ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இன்னைக்கு ஜெயிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

    • போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இப்படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்
    • ஏ.ஆர். ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்


     



    ராம்சரண் மற்றும் ஜான்வி கப்பூர் இணைந்து நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இன்னும் தலைப்பிடாத புதிய படம் தற்போதைக்கு ராம்சரண் 16 என அழைக்கப்படுகிறது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. புதிய பட துவக்க விழா வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

    இவ்விழாவில் நடிகர் சிரஞ்சீவி, ராம் சரணின் மனைவி, உபாசனா காமினேனி, இயக்குநர் ஷங்கர் மற்றும் ஏ.ஆர். ரகுமான் பங்கேற்றனர. புச்சி பாபு சனா இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

    முன்னணி தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜான்வி கபூர் 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

     


     




     



    ஜான்வி கபூரின் அடுத்த படமாக இப்படம் அமைந்து இருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் நடிக்க இருக்கின்றனர். இதனால் ராம்சரணின் 16 வது படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்
    • இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 7 கட்டமாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு வருகிறது.

    அதன் படி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்த வரிசையில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி கீதா சிவராஜ் குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த முன்னாள் முதல்வர் பங்காரப்பாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளர் கீதா சிவராஜ் குமார், பத்ராவதியில் பிரசாரத்தை துவங்கியுள்ளார். திறந்த வேனில் பத்ராவதி டவுன், கரேஹள்ளி கிராமத்தில் ஊர்வலமாக வந்து, ஓட்டு சேகரித்தார். அவருடன் சிவராஜ்குமார், பத்ராவதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சங்கமேஸ்வர் இருந்தனர்.

    இதற்கிடையில், மக்களவை தேர்தல் முடியும்வரை கன்னட நடிகர் சிவராஜ் குமாரின் படங்களுக்கு தடை விதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

    அந்த புகாரில், அவர் நடித்த திரைப்படங்கள், விளம்பரங்கள் காட்டுவதைத் தவிர்க்க திரையரங்குகள், தொலைக்காட்சி சேனல்கள், சமூக ஊடக தளங்களுக்கு உத்தரவு பிறப்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. 

    • முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
    • திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி அதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளன. அந்த வகையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலின் படி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

     


    இந்த வரிசையில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராக்நந்த்கான் தொகுதியிலும், கே.சி. வேனுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    • பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
    • சிவராஜ்குமார் விஜய்-இன் அரசியல் வருகை குறித்து கருத்து.

    இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.

    சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

     


    இது குறித்து பேசிய அவர், "எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்."

    "அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்."

    "அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது," என தெரிவித்தார். 

    • ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’.
    • இப்படத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது 'ஜெயிலர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 'ஜெயிலர்' திரைப்படம் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    ஜெயிலர் போஸ்டர்

    இந்நிலையில், 'ஜெயிலர்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியும் சிவராஜ்குமாரும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதற்கு முன்பு ரஜினியும் மோகன் லாலும் இடம்பெற்றிருந்த போஸ்டரை படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.


    புனித் ராஜ்குமாரின் இறப்பு, குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை ஏற்படுத்தி உள்ளதாக நடிகர் சிவராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
    கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில், புனித் ராஜ்குமாரின் சகோதரரான நடிகர் சிவராஜ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவு, எங்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் வயது வித்தியாசமின்றி தங்களின் குழந்தைகளுடன் வந்து அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவு ரசிகர்களுக்கு எந்த அளவுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

    அவர் என்னை விட 13 ஆண்டுகள் சிறியவர். அவர் இறப்பு எனது குழந்தையை இழந்துவிட்டது போன்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்கள் தீவிர வேதனை அடைகிறார்கள். எங்களுக்கு அவரது இழப்பால் ஏற்பட்டுள்ள வேதனை நிரந்தரமாக இருக்கும். ஆனால் நாம் அனைவரும் வாழ்க்கையை முன்னெடுத்து வாழ வேண்டும். நடந்த விஷயங்களை மறந்து பயணிக்க வேண்டியுள்ளது.

    சிவராஜ்குமார்
    சிவராஜ்குமார்

    கர்நாடக அரசு குறிப்பாக போலீசார் சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். எனது தந்தை இறந்தபோது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தன. ஆனால் இப்போது எந்த இடத்திலும் சிறு அசம்பாவித சம்பவங்கள் கூட நடக்கவில்லை. இதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எங்கள் குடும்பத்தின் மீது அவர் மிகுந்த அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    புனித் ராஜ்குமாரின் மரணத்தை தாங்க முடியாமல் ரசிகர்கள் சிலர் தற்கொலை செய்து கொண்டதாக அறிந்தேன். யாரும் இத்தகைய முடிவை எடுக்கக்கூடாது. புனித் ராஜ்குமாரே இதை விரும்ப மாட்டார். அன்பு இருக்க வேண்டும். அதற்காக யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள கூடாது. தங்களின் குடும்பத்தை பார்க்க வேண்டும். குடும்பத்தை கவனித்து கொள்வது முக்கியம்”. 

    இவ்வாறு சிவராஜ்குமார் கூறினார்.
    ×