என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீட்"

    • இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது.
    • தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.

    புதுடெல்லி:

    மருத்துவ மாணவர் சேர்க்கை, மத்திய அரசு அதிகாரி பணியிடங்கள், ஆசிரியர் தேர்வு, மருத்துவ பணியிடங்கள் உள்ளிட்டவற்றுக்கு நுழைவுத் தேர்வுகளும், எழுத்து தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற தேர்வுகளில் அடிக்கடி முறைகேடுகள் நடைபெறுகின்றன. வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்றவை முக்கிய பிரச்சனைகளாக உருவெடுத்துள்ளன.

    ஆள்மாறாட்ட முறைகேடுகளை களைய 'பயோ மெட்ரிக்' சோதனை முறையை தேர்வு மையங்களில் அறிமுகப்படுத்த தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) திட்டமிட்டு உள்ளது. இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வின் போது டெல்லியில் உள்ள சில மையங்களில் இந்த முறை சோதனை செய்து பார்க்கப்பட்டது. தேர்வரின் முக அடையாளம், புகைப்படம் உள்ளிட்டவை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது.

    இதில் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்ததால், வருகிற 2026-ம் ஆண்டில் இருந்து முக்கிய நுழைவுத் தேர்வுகளில் முகம் சரிபார்க்கும் பயோ மெட்ரிக் சோதனை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    • 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது
    • இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.

    இதையடுத்து நீட் தேர்வு எழுதினாலே மருத்துவ மேற்படிப்பில் சேரமுடியும் என்ற நிலை உருவானது.

    இந்நிலையில், EWS (ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம்) பிரிவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த 140 மாணவர்கள், ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் செலுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது

    இந்த 140 மாணவர்களுக்கும் தனியார் கல்லூரிகளில் NRI ஒதுக்கீட்டில் இடம் கிடைத்துள்ளது. இதற்கு கல்வி கட்டணமாக ஆண்டுக்கு ரூ.25 லட்சம் - ரூ.1 கோடி வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த தகவல் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் நம்பகத் தன்மையை இது கேள்வி எழுப்புகிறது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    மேலும், ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்கும் குறைவான வருவாய் கொண்ட உயர்சாதி ஏழைகளே, EWS பிரிவில் வருவார்கள் என மத்திய அரசின் சட்டம் கூறும் அவர்களால் எப்படி வருடத்திற்கு 1 கோடி கட்டணம் செலுத்தமுடியும் என்று நெட்டிசன்கள் இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.
    • தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டை விட்டு அண்டை மாநிலங்களுக்கு முதலீட்டாளர்கள் ஓடினர்.

    * எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கையெழுத்தான முதலீடுகளில் பாதி அளவு கூட தமிழ்நாட்டிற்கு வரவில்லை.

    * நமது அரசன் சாதனைகள் பற்றி வடமாநில Youtube சேனல்களில் பேசுகின்றனர்.

    * தெற்காசிய அளவில் தமிழ்நாட்டை நிச்சயம் முன்னணி மாநிலமாக மாற்றி காட்டுவேன்.

    * நீட் விலக்கு வாக்குறுதியை இப்போது நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் அதில் விலக்கு பெற முயற்சிக்காமல் இல்லை.

    * நீட் தேர்வுக்கு தடை வாங்க முடியவில்லை என்பதை மறுக்கவில்லை. தமிழ்நாட்டுக்கான நீதி தரும் ஆட்சியில் மத்தியில் அமையும்

    * மத்தியில் ஒருநாள் தமிழ்நாட்டுக்கான நீதியை தரும் ஆட்சி அமையத்தான் போகிறது.

    * அடுத்து வருவதும் நமது திராவிட மாடல் ஆட்சிதான் என்றார். 

    • பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5%, 12%, 18%, 28% என்ற நான்கு அடுக்கு வரி முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கு வரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு மட்டும் 40% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி கட்டங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவன கட்டணங்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பேசிய நிர்மலா சீதாராமன், "போட்டித் தேர்வு, நுழைவுத் தேர்வு பயிற்சி நிறுவனங்களை கல்வி நிறுவனங்களாக ஏற்க முடியாது. அதனால், 18% ஜி.எஸ்.டி. அவர்களுக்குப் பொருந்தும்" என்று விளக்கம் அளித்தார்.

    அதாவது JEE அல்லது NEET தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவன கட்டணம் ரூ.50,000 ஆக இருந்தால் இனிமேல் அதன் கட்டணம் ரூ.59,000 ஆக உயரும்.

    இந்த 18% வரி பயிற்சி மையங்களுக்கு மட்டுமல்ல, கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தனியார் ஆசிரியர்களின் ஆன்லைன் வகுப்புகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜி.எஸ்.டி. வரியால் பயிற்சி நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்படுவது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    • நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.
    • ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டது.

    மருத்துவ மேற்படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் பூஜ்ஜியம் மற்றும் அதைவிட குறைந்த மதிப்பெண்களை (நெகடிவ்) எடுத்தாலும், படிப்பில் சேர முடியும் என்று மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு அறிவித்தது.

    நீட் தேர்வில் தேர்ச்சிக்கு 50 பர்சன்டைல் பெற்றாக வேண்டும் என இருந்ததை மாற்றி 0 பர்சன்டைல் முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. ஜீரோ பெர்சண்டைல் என்பது ஜீரோ மதிப்பெண் அல்ல. இருப்பதிலேயே கடைசி மதிப்பெண். அதாவது கடைசி மதிப்பெண் நெகடிவில் இருந்தாலும் அதுதான் ஜீரோ பெர்சண்டைல். எனவே முட்டை மதிப்பெண்ணுக்கும் கீழ் நெகடிவ் மதிப்பெண் எடுத்தாலும் சீட் கிடைக்கும்.

    மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் 2025 ஆம் ஆண்டு நீட் தேர்வில் 0 மற்றும் மைனஸ் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நீட் தேர்வில் -40, -25 மதிப்பெண் பெற்றவர்களும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி நீட் முதுநிலை தேர்வில் ஜீரோ, மைனஸ் மதிப்பெண் எடுத்த 27 பேருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்துள்ளது.

    தரமான மருத்துவர்களை உருவாக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஜீரோ பர்சன்டைல் முறையால் நீட் தேர்வின் நோக்கமே சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    • இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.
    • நாளை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

    2025 - 26ம் கல்வியாண்டிற்கான கால்நடை மருத்துவப் படிப்பு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. இதில் இன்று பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம் நடைபெறுகிறது.

    நாளை சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்) கலந்தாய்வு மாதவரம் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேரடியாக நடைபெறுகிறது.

    நாளை மறுதினம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக மாதவரத்தில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

    • சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.
    • முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம்.

    எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான நீட் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு இன்று பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதாவது இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 15% அகில இந்திய ஒதுக்கீடு (AIQ) மற்றும் மத்திய அரசின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் உள்ள MBBS, BDS மற்றும் BSc நர்சிங் படிப்புகளில் சேருவதற்கு இந்த கவுன்சிலிங் செயல்முறை நடத்தப்படுகிறது.

    நாடு முழுவதும் உள்ள 780 மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சுமார் 1.18 லட்சம் மருத்துவ இடங்களுக்கு இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 12.36 லட்சம் பேர் கலந்துகொள்கின்றனர். 

    • வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்து.
    • இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டும் முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    தமிழக பா.ஜக. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் 100 இடங்கள் பிடித்த மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 6 பேர் இடம் பிடித்திருப்பது எல்லையற்ற மகிழ்ச்சியளிக்கிறது.

    அரசியல் ரீதியான அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து தங்களது அயராத உழைப்பினாலும் விடா முயற்சியினாலும் நீட் தேர்வினை எதிர்கொண்டவர்களுக்கும் தகுதி மதிப்பெண் பெற்று தேர்வானவர்களுக்கும் முதல் நூறு இடங்களைப் பிடித்து சாதித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்!

    நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் தலைசிறந்த மருத்துவர்களாக மக்கள் சேவையில் சிறந்து விளங்கவும் இம்முறை வெற்றி வாய்ப்பைத் தவற விட்டவர்கள் மனம் தளராது மீண்டு முயற்சிக்கவும் வாழ்த்துகிறேன்.

    • தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.
    • மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

    2025-2026 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 4-ந்தேதி நடைபெற்றது. பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். அதிலும் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதி இருந்தனர்.

    இந்த நிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியட்டது தேசிய தேர்வு முகமை. தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ என்ற இணைய தளத்தில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.

    மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் "NEET UG 2025 Result" என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு வரும் இணைய பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பாஸ்வர்ட் போட்டு சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
    • அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.

    நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய் அவர்களே.

    நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.

    ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.

    கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

    ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.

    உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.

    உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்…

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நீட் தேர்வை இரண்டு ஷிப்ட் அடிப்படையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
    • இரண்டு வினாத்தாள் ஒரே மாதிரியான சிரமம், எளிமையை கொண்டிருக்காது என்பதால் எதிர்த்து மனுத்தாக்கல்

    முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூன் 15ஆம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆன்-லைன் மூலம் நடத்தப்பட இருக்கிறது. தேர்வை இரண்டு முறையாக (two shifts) அதாவது காலை மற்றும் மாலை என இரண்டு முறை நடத்த முடிவு செய்யப்பட்டது. இரண்டு முறை நடத்தப்பட்டால் சிலருக்கு எளிதாகவும், சிலருக்கு கடினமானதாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஒரே நேரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது நீட் தேர்வு ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எந்த இரண்டு வினாத்தாள்களும் ஒரே மாதிரியான சிரமம் அல்லது எளிமையைக் கொண்டவை என்று ஒருபோதும் கூற முடியாது என நீதிமன்றம் தெரிவித்தது.

    • உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.
    • ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கௌதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து 24-வது மாணவர் நீட் தேர்வால் உயிரிழப்பு!

    ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது மு.க.ஸ்டாலின் உணர்வாரா?

    அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே-

    திமுக ஆட்சி வந்தால் நீட் ஒழிந்துவிடும் என இந்த டம்மி அப்பாவும், அவர் மகனும் கூறிய அத்தனையும் பொய்! பொய்! பொய்!

    ஊழல் செய்யவும், கொள்ளையடித்த பணத்தைக் காப்பாற்றவும், ED ரெய்டுக்கு பயந்து "தம்பி"யை தப்பிக்க வைக்கவுமே இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. (#யார்_அந்த_தம்பி?)

    இவர்களா நீட் ரத்து செய்யப்போகிறார்கள்? அத்தனையும் நாடகம்! திமுகவின் நாடகத்திற்கு நீங்கள் பலியாக வேண்டாம்!

    ஒரு முறை, ஒரே ஒரு முறை, உங்கள் பெற்றோர்களைப் பற்றி சிந்தித்து பாருங்கள். அவர்களுக்கு நீங்கள் தான் உலகமே. அவர்களை விட்டுச் செல்ல ஒருபோதும் நினைக்காதீர்கள்.

    இந்த உலகில் எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. உங்களுக்காக பல்வேறு கதவுகள் திறந்து உள்ளன. அவைகளை கண்டறிந்து முன்னேறுங்கள்.

    NEVER EVER GIVE UP!

    தம்பி கௌதமின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்டாலின் அவர்களே- வெட்டியாக எடுக்கும் உங்கள் போட்டோஷூட்டை நீட் மாணவர்களுக்காக ஒருமுறை எடுத்து, அவர்களிடம் நீங்கள் சொன்ன பொய்க்காக பகிரங்க மன்னிப்பு கேளுங்கள்! என்று கூறியுள்ளார். 



    ×