என் மலர்
நீங்கள் தேடியது "வைகோ ஆறுதல்"
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் வன்முறை வெடித்தது. துப்பாக்கி சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதுவரை 10 பேர் வரை உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று தூத்துக்குடிக்கு சென்றார். அங்கு, காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு தனது முழு ஆதரவை தெரிவித்துள்ள வைகோ, ஆலை மூடப்படும் வரை தனது போராட்டம் தொடரும் என கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite #SterlitePolicefiring
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது47). இவர் கடந்த 7-ந்தேதி நீட் தேர்வு எழுதுவதற்காக தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்தை கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு அழைத்து சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டதால் கிருஷ்ணசாமி இறந்தார்.
அவருடைய குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று விளக்குடி வந்தார். அப்போது அவர் கிருஷ்ணசாமியின் மனைவி பாரதிமகாதேவி, மகள் ஐஸ்வர்யா மகாதேவி, மகன் கஸ்தூரிமகாலிங்கம் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மத்திய அரசு தமிழ்நாட்டை பழி வாங்குகிறது. மாநில அரசும் அதை வேடிக்கை பார்க்கிறது. தமிழகத்தில் தேர்வு எழுத போதிய இடவசதி இருக்கும் போது தமிழக மாணவர்களை ஏன் வேறு மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள ஆட்சி ஒழிந்ததால் தான் தமிழக மக்களுக்கு விடிவு காலம் பிறக்கும். உயிரிழந்த கிருஷ்ணசாமி குடும்பத்துக்கு மத்திய அரசு என்ன பதில் செல்ல போகிறது?
இவ்வாறு அவர் கூறினார். #Neetexam #Vaiko






