search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தென்தாமரைகுளம்"

    • இன்று இரவு தேர்பவனி நடக்கிறது
    • 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நாளை (5-ந்தேதி) வரை நடைபெறுகிறது. திருவிழாவையொட்டி 1-ம் திருநாள் முதல் தொடர்ந்து 8-ம் நாள் நேற்று வரை காலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை , 6.45 மணிக்கு கூட்டு திருப்பலியும், மறையுரையும், இரவு 9 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    9-ம் நாளான இன்று (4-ந்தேதி) காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி நடந்தது. இதில் கன்னியா குமரி காசா கிளாரட் அருட்பணி டன்ஸ்டன் தலைமை தாங்கி மறை உரையாற்றினார். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, 6.45 மணிக்கு சிறப்பு திருப்புகழ் மாலை, நற்கருணை ஆசீர் நடை பெறுகிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட செயலர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமை தாங்குகிறார். சென்னை சட்டப்பணி அருட்பணி எம்.சி.ராஜன் மறையுரையாற்று கிறார். இரவு 9 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனி யும் நடைபெறுகிறது.

    10-ம் நாளான நாளை காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்ட திருப்பலி நடைபெறுகிறது. இதற்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண் ரூபஸ் தலைமை தாங்குகிறார். கிறிஸ்தவ வாழ்வு பணி குழு செயலர் அருட்பணி எட்வின் வின்சென்ட் மறை யுரையாற்றுகிறார். பிற்பகல் 3.30 மணிக்கு அதிசய பனிமய அன்னையின் அலங்கார தேர்பவனியும், மாலை 6 மணிக்கு திருக் கொடி இறக்கம், நற்கருண ஆசீர், இரவு 7 மணிக்கு இன்னிசை விருந்தும் நடை பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறை மக்கள், பங்குப்பேரவை யினர், அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    • தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் பேரூராட்சி பாரதிய ஜனதா கவுன்சிலரும், பாரதிய ஜனதா மாவட்ட ஐ.டி பிரிவு துணைத் தலைவருமான சுபாஷ் முதல்-அமைச்சர் குறித்து அவதூறு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நேற்று மாலை தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாரதிய ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை தாங்கினார். தென்தா மரைகுளம் பேரூராட்சி தலைவர் கார்த்திகா பிரதாப், ஒன்றிய பாரதிய ஜனதா பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன், பேரூர் தலைவர் தாமரைபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜ், எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., ஸ்ரீ குரு சிவச்சந்திரன், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், பாஜக பொரு ளாதார பிரிவு மாவட்ட தலைவர் அய்யப்பன் உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

    போராட்டத்தில் மைலாடி பேரூர் தலைவர் பாபு, தென்தாமரைகுளம் பேரூராட்சி கவுன்சிலர்கள் பாய், பாமா, மேனகா, அமுதா, பாரதிய ஜனதா நிர்வாகிகள் ராஜகுமாரன், சந்திரசேகர், சிவகுமார், முத்துகிருஷ்ணன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி உட்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கைதான 5 பேரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை
    • பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    தென் தாமரைகுளம் அருகே தேங்காய் காரன் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெலிக்ஸ் என்ற சிட்டி (வயது 38 )வேன் டிரைவர். இவர் கோவையில் உள்ள கொரியர் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார் .கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் ஊருக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் தேங்காய் காரன் குடியிருப்பு சானல் கரை பகுதியில் வைத்து பெலிக்சை அவரது நண்பர்கள் வெட்டி கொலை செய்தனர். இதுகுறித்து பெலிக்சின் தந்தை ரெஜி தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷ் ஜெகன் உள்பட கண்டால் தெரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. ராஜா தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார் கொலை வழக்கு தொடர்பாக கண்ணன், சுபாஷ், ஜெகன், வினோத், ஸ்ரீ கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கண்ணனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரண மாக கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது தொடர்பாக போலீ சாரிடம் அவர்கள் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் பெலிக்சும் நண்பர்கள். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு கார் ஒன்று வாங்கியது தொடர்பாக ரூ.15000 பணம் கொடுக்க வேண்டும். அந்த பணத்தை பெலிக்ஸ் அடிக்கடி என்னிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் வீட்டில் இருந்தபோது பெலிக்சும் அவரது நண்பரும் எனது வீட்டிற்கு பணம் கேட்டு வந்தனர். அப்போது எனது செல்போனை பெலிக்ஸ் எடுத்துச் சென்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மீண்டும் இரவு பெலிக்ஸ் அவரது நண்பருடன் வந்து என்னிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். நான் மறுநாள் மாலையில் பணம் தருவதாக கூறினேன். அப்போது என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார்.இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக எனது நண்பரிடம் தெரிவித்தேன்.பின்னர் பெலிக்சை தீர்த்துக் கட்ட முடிவு செய்து அவரை போன் மூலமாக தொடர்பு கொண்டு வீட்டில் பணம் இருப்பதாக கூறி வரவழைத்தோம். அவர் அங்கு வந்தார் அப்போது அவரை வெட்டி கொலை செய்தோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இந்த கொலை வழக்கில் மேலும் இரண்டு பேருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .கொலை நடந்த சில மணி நேரங்களில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டி உள்ளார்.

    • இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை.
    • அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளது

    கன்னியாகுமரி:

    அகஸ்தீஸ்வரம் அடுத் துள்ள சுக்குப்பாறை தேரி விளை சிவ சுடலைமாட சுவாமி கோவில் பின்புறம் நேற்று மாலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்துள்ளது. இதைப் பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தென்தாம ரைகுளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார் அங்கு கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணத்தை கைப்பற்றிஆசாரி ள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்து கிடந்த முதியவர் யார்? என தெரியவில்லை. மேலும் அவரது கழுத்தில் டயாலிசிஸ் செய்ததற்கான சிரெஞ்சு உள்ளதால் அவர் சிறுநீரகம் பாதிப்பு போன்ற நோயால் அவதிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செய்து கொண்டார்
    • தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைக்குளம் அருகே கீழமணக்குடி கீழத் தெருவை சேர்ந்தவர் அமலதாஸ் (வயது 63). இவரது மகள் மேரி ஸ்டெல்லா (39). இவருக்கு அதே பகுதியில் உள்ள சேவியர் காலனியை சேர்ந்த சகாயதாமஸ் பெர்லின் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    சகாயதாமஸ் பெர்லின் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் சொந்த ஊரில் தற்போது வீடு கட்டி வருகிறார். இந்நிலையில் சகாயதாமஸ் பெர்லினுக்கு வெளிநாட்டில் சரியாக தொழில் நடைபெறாததால் வீட்டிற்கு பணம் அனுப்பாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை யடைந்த மேரி ஸ்டெல்லா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயமடைந்தவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    • விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கயத்தாறு தெற்கு ஆத்திகுளத்தை சேர்ந்தவர் மகேஷ்வரன் (வயது 42). இவர் குடும்பத்துடன் நாகர்கோவில் ராமன்புதூர் சற்குண வீதியில் தங்கி இருந்து கடைகளுக்கு பலகாரங்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

    மகேஷ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் கீழ மணக்குடியிலிருந்து மேல மணக்குடி நோக்கி சென்று கொண்டு இருந்தார். அப்போது கீழமணக்குடி பாலத்தில் செல்லும்போது எதிரே வடக்கன்குளம் பூஞ்சோலை தெருவை சேர்ந்த அந்தோணி ராஜேந்திரன் (வயது 34) என்பவர் ஓட்டி வந்த டாரஸ் லாரி எதிர்பாராதவிதமாக மகேஷ்வரன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் மகேஷ்வரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த வழியாக சென்றவர்கள் மகேஷ்வரனை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரு தரப்பைச் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு
    • தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரை குளம் அருகே உள்ள கீழ மணக்குடி யைச் சேர்ந்தவர் விக்டர் (வயது 35). இவர் சம்பவத்தன்று வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார் 

    அப்போது அங்கு வந்த சார்லஸ் (47), ஜான் பிரிட்டோ (26) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தகறாறு செய்து உள்ள னர். மேலும் அரிவா ளால் விக்டரின் இடது கன்னத்தில் வெட்டினர். இதை தடுக்க வந்த ஜோசப் பிராங்கோ (30), சகாயராஜ்(57) ஆகியோரும் அரிவாளால் வெட்டப்பட்டதாக தென் தாமரை குளம் போலீ சில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும் அவர்களுடன் வந்த சிலர் தனது தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்த தாகவும் விக்டர் புகாரில் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த சகாய மிதின்மோன்( 18) என்பவர் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், நான் நண்பர்களு டன் விக்டர் வீட்டு பக்கம் சென்ற போது சுந்தர்( 42), சகாயராஜ், பிராங்கோ, ஜோசப் ஆன்றணி (50), தாசன் (45) ஆகியோர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

    இந்த கோஷ்டி மோதலில் காயமடைந்த விக்டர், ஜோசப் பிராங்கோ, சகாயராஜ் ஆகியோர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை யிலும், சகாய மிதின் மோன் கன்னியாகுமரி அரசு மருத்துவ மனையிலும் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

    இது குறித்து தென் தாமரை குளம் போலீசார் விசாரணை நடத்தி இரு தரப்பபையும் சேர்ந்த 16 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். கடந்த 18-ந் தேதி அஜின் (22) என்பவர் வேகமாக பைக் ஓட்டி வந்து, சகாய ஜோசப் (57) என்பவர் மீது மோதிய தாகவும் இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாகவே இந்த மோதல் நடந்துள்ளது என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர்.
    • அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர்.

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள வெள்ளையந்தோப்பை சேர்ந்தவர் செல்வேந்திரன் கயிறு வியாபாரம் செய்து வருகிறார். இவரது வீட்டில் அதிகாலையில் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டுள்ளது. இதை கேட்டு திடுக்கிட்டு எழுந்த செல்வேந்திரன் அங்கு பூனையை போன்ற விலங்கு ஒன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருந்ததை பார்த்தார். அது மரநாய் என தெரிய வந்ததும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த வனத்துறை ஊழியர்கள் மரநாயை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை அடர்ந்த காட்டு பகுதிக்குள் கொண்டு விட்டனர். பிடிபட்ட மரநாய் சுமார் 2 கிலோ எடை கொண்டதாக இருந்தது என்று வன ஊழியர்கள் தெரிவித்தனர்.

    • இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்?
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை

    கன்னியாகுமரி:

    தென்தாமரைகுளம் அருகே உள்ள கீழமணக்குடியில் தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    இதன் அருகே வீடுகள் மற்றும் ஏராளமான கடைகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கடைகள் அனைத்தும் பூட்டப்பட்ட பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர் உள்ளே புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    மேலும் அங்கிருந்த மானிட்டர், கேமரா ஆகியவற்றை உடைத்துள் ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு விட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று உள்ளார்.

    இந்நிலையில் நேற்று காலை ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம்.எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    மேலும் இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை.
    • உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகர்கோவில்:

    சந்தையடி அருகே உள்ள இடையன்விளையை சேர்ந்தவர் தம்பு என்ற முருகன் (வயது 60) சமையல் தொழிலாளி.

    இவர் நேற்று மாலை பொற்றையடி அருகே உள்ள வெங்கலராஜன் கோட்டை கால்வாயில் தவறி விழுந்தார். நீண்ட நேரமாக தண்ணீரில் கிடந்ததால் இவர் பரிதாபமாக இறந்தார். மேலும் கால்வாயில் உள்ள மீன் மற்றும் நண்டுகள் கடித்தும், விழுந்ததில் ஏற்பட்ட காயங்களும் அவர் உடலில் உள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்த தென்தாமரைகுளம் போலீசார் சம்பவ இடம் சென்றனர். உடலை கைப் பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
    • ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் அய்யாகோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது45) கொத்தனார். இவருக்கு பாஞ்சாலி என்ற மனைவி உள்ளார்.

    முருகன் கடந்த 1-ந் தேதி தென்தாமரை குளம் பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவரது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் .அப்போது வீட்டின் முதல் மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார் .

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவருடன் பணியாற்றிய சக பணியாளர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்ப த்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் முருகன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி பாஞ்சாலி அளித்த புகாரின் பேரில் தென்தாமரைக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்பவனி 4-ந் தேதி நடக்கிறது
    • விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்குப் பேரவை, அருட் சகோதரிகள், பங்கு தந்தை ஆகியோர் செய்து வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    தென்தாமரைகுளம் புனித பனிமய அன்னை ஆலய குடும்ப விழா நேற்று மாலை 6.45 மணிக்கு கொடி யேற்றம், கூட்டு திருப்ப லியுடன் தொடங்கியது. விழாவிற்கு முன்னாள் பங்கு தந்தை அருட்பணி செல்லையன் தலைமை தாங்கினார்.

    2-ம் நாளான இன்று (28-ந் தேதி) மாலை அகத்தியமுனி குழந்தைகள் நல மருத்துவ மனை இயக்குனர் அருட்பணி லியோன் ஹென்சன்   தலைமையில் மேலஆசாரிபள்ளம் பங்கு தந்தை அருட்பணி சுதர்சன் மறையுரையாற்றுகிறார்.

    3-ம் நாள் அருட்பணி ஜாண் ராபர்ட் ஜூலியஸ் தலைமையில் தேவசகாயம் மவுண்ட் பங்கு தந்தை அருட்பணி மைக்கேல் ஜார்ஜ் பிரைட்டும், 4-ம் நாள் கீழமணக்குடி பங்குதந்தை ஆன்றனி பிரபு தலைமையில் குளச்சல் இணை பங்கு தந்தை அருட்பணி விஜின் பிரைட்டும், 5-ம் நாள் புனித அலோசியஸ் இளங்குருமடம் அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் தலைமையில் ஆற்றுப்படுத்துதல் பணிக்குழு செயலர் அருட்பணி சுதன் ஸ்டார் மறையுரையாற்றுகின்றனர்.

    6-ம் நாள் விழாவான வருகிற 1-ந் தேதி மாலையில் பெரியகாடு புனித அந்தோனியார் திருத்தல அதிபர் அருட்பணி பிரான்சிஸ் போர்ஜியா தலைமையில் சகாயபுரம் புனித சகாய அன்னை திருத்தலம் அதிபர் ேஜாசப் ரொமால்டும், 7-ம் நாள் கன்னியாகுமரி பங்கு தந்தை அருட்பணி ஆன்றனி அல்காந்தர் தலைமையில் சூழால் பங்கு தந்தை அருட்பணி மார்ட்டினும் மறையுரையாற்றுகின்றனர்.

    8-ம் நாள் மாலை 6.15 மணிக்கு  ஜெபமாலை, புகழ் மாலை, 6.45 மணிக்கு கூட்டுத் திருப்பலி நடக்கிறது. ஆயர் இல்லம் புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளி தாளாளர் அருட்பணி மரிய கிளாட்ஸ்டன் தலைமையில் கோட்டார் மறைமாவட்ட இளைஞர் பணிக்குழு செயலர் அருட்பணி ஜெனிபர் எடிசன் மறை யுரையாற்றுகிறார்.

    9-ம் திருவிழா வருகிற 4-ந் தேதி காலையில் கன்னியாகுமரி இணை பங்கு தந்தை அருட்பணி சகாய வினட் மேக்சன் மறையுரையாற்று கிறார். மாலையில் கோட்டார் மறை மாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஹிலாரியுஸ் தலைமையில் அனந்தன்நகர் பங்கு தந்தை அருட்பணி மை்கேல் ஏஞ்சலூஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு பனிமய அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.

    10-ம் நாள் விழாவில் காலை 8 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும, அருட்பணி எம்.சி.ராஜன் தலைமையில் கோட்டார் வட்டார முதல்வர் அருட்பணி ஏ.எஸ்.ஆனந்த் மறையுரையாற்றுகிறார். மாலையில் தேர் பவனி நடக்கிறது. தொடர்ந்து 6 மணிக்கு திருக்கொடி இறக்கம், நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்குப் பேரவை, அருட் சகோதரிகள், பங்கு தந்தை ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×