என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எம்.சாண்ட்"
- கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
ஓமலூர்:
ஓமலூர் வட்டாரத்தில் கல்குவாரிகள் அதிகளவில் செயல்பட்டு வருகிறது. அதிலும், காடையாம்பட்டி தாலுக்காவில் மிக அதிகமாக கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 74 கிரஷர்கள், 50 கல்குவாரிகள் உள்ளன.
போராட்டம்
இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிரஷர், குவாரி மற்றும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு கிரஷர் மற்றும் குவாரிகள் செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தற்போது எம்.சாண்ட், ஜல்லி ஆகியவை ஒரு யூனிட் ரூ.200 வீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது.அதன்படி ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ.3 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 500-ஆகவும், பி.சாண்ட் ரூ. 4 ஆயிரத்து 200-ல் இருந்து ரூ.4 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே போல் ஒரு யூனிட் 40 எம்.எம், 30 எம்.எம் ஜல்லி கற்கள் ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2 ஆயிரத்து 500-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஒரு யூனிட் சிப்ஸ் ஆயிரத்து 800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தினர். ஆனால், தற்போது ஒரு யுனிட் சிப்ஸ் 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 300 ரூபாய்க்கு விற்ற கல் பவுடர், தற்போது 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்படுகிறது.இந்த விலை உயர்வு உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளது.
இது குறித்து சேலம் மாவட்ட கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர் நலச்சங்க செயலாளர் ராஜா கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஜல்லி உள்ளிட்டவற்றின் விலையை உயர்த்தவில்லை. தற்போது கிரஷர் உதிரிபாகங்கள் விலை, டீசல் விலை, மின் கட்டண உயர்வு ஆகியவை பல மடங்கு உயர்ந்து விட்டது. அதே போல தொழிலாளர்கள் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால், விலை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரம் சென்னை உள்ளிட்ட வெளி மாவட்ட விலையை ஒப்பிட்டால், சேலத்தில் விலை குறைவுதான். அரசு நிர்ணயித்த விலையை விட குறைவாகவே விற்பனை செய்யபடுவதால், மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்