என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுற்றுலாப்பயணி"
- இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம்
சுற்றுலா விசாக்கள் மூலம் வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளுக்கு அனுப்பும் மோசடியாளர்கள், ஆள் கடத்தல் காரர்களிடம் யாரும் சிக்கி கொள்ள வேண்டாம் என இலங்கை நாட்டு மக்களுக்கு அங்குள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது வேலை மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு முக்கியமானது. எனவே அவர்கள் இலங்கை வேலைவாய்ப்பு மையத்தில் பதிவு செய்துவிட்டு வெளிநாடு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்ட விரோதமான முறையில் சுற்றுலா விசா மூலம் தொழில் செய்ய செல்ல வேண்டாம் என அந்நாட்டு அமைச்சர் மனுஷ நாணயக்காரா தெரிவித்து உள்ளார்.
- பகவதி அம்மன் கோவில் தேரோட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.
இதில் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை விவேகானந்தா கேந்திர நிறுவனம் நிர்வகித்து வருகிறது. அதே சமயம் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் பராமரித்து வருகிறது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்துவருகிறார்கள்.
இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.
தினமும் காலை ௮ மணிக்கு தொடங்கும் படகு போக்குவரத்து மாலை 4 மணிவரை இடைவேளை இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற சனிக்கிழமை (நாளை) காலையில் கன்னியாகுமரி பகவதிஅம்மன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி தேரோட்டம் நடக்கிறது. காலை 7 மணிக்கு மேல் 8மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
இந்த தேரோட்டத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் விவேகா னந்த கேந்திர தொழி லாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்பதற்கு வசதியாகவும் சுற்றுலாப் பயணிகள் இந்த தேர் திருவிழாவில் கலந்துகொண்டு தேர் இழுப்பதற்கு நாளைக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்குவதற்கு பதிலாக 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்குகிறது.
இந்த தகவலை கன்னியா குமரி விவேகானந்த கேந்திர நிர்வாக அதிகாரி அனந்தஸ்ரீ பத்மநாபன் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்