search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாட்ஸ்-அப் குழு"

    • வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பனை
    • கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவ தும் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குளச்சல், கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் கஞ்சா விற்பனை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

    கடந்த சில நாட்களில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கஞ்சா விற்பவர்களின் வங்கி கணக்குகளையும் போலீ சார் முடக்கி உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று ராஜாக்கமங்கலம் நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர். வெளிமாநிலங்களில் இருந்து கூரியர் மூலமாக கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கூரியர் நிறுவ னங்களில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கஞ்சா விற்பனை செய்யும் கும்பல், வாட்ஸ்-அப் குழுவை ஏற்படுத்தி அதன்மூலம் கஞ்சா விற்பது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து கூரியர் நிறுவனங்களுக்கு வரும் பார்சல்களை சோதனை செய்த பிறகே அனுப்பி வைக்க வேண்டும் என்று கூரியர் நிறுவனங்க ளுக்கு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கூரியர் நிறுவனம் மற்றும் ஆம்னி பஸ் உரிமையாளர்களுடன் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது கூரியர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் ஆம்னிபஸ் உரிமையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது. கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அவர்களை உடனடியாக போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து ஒப்படைக்க வேண்டும். பஸ் மற்றும் கூரியரில் பார்சல் அனுப்புபவர்களின் ஆவண நகலை பெற்றுக் கொண்டே அனுப்ப வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

    கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் பல்வேறு விசாரணைகள் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கஞ்சா விற்பனையில் பல முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கூரியர் மூலமாக கஞ்சாவை வரவழைத்து விற்பனை நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர் ஆசாமிகள் மட்டுமின்றி வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    தனிப்படை போலீசார் ரகசியமாக கண்காணித்து அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர் . கஞ்சா புழக்கத்தின் காரணமாக மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.எனவே கஞ்சா விற்பனை செய்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.

    ×