search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேர்தல் புகார்கள்"

    • செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது.
    • மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெரம்பலூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நன்னடத்தை விதிகள் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. இதைதொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சுழற்சி முறையில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க விரும்புவோர் 18004259188 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலும், 04328-299166 299188, 299492, 299433, 299255 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும், பொதுமக்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை சி விஜில் என்ற செல்போன் செயலியில் புகைப்படமாகவும், வீடியோ, ஆடியோவாகவும் பதிவேற்றம் செய்து தெரிவிக்கலாம். இந்த செயலியில் தெரிவிக்கப்படும் புகார்களுக்கு 100 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று வரை தொலைபேசி வாயிலாக 13 புகார்களும், சி விஜில் என்ற செல்போன் செயலியின் மூலம் 5 புகார்களும் வந்துள்ளது. இந்த புகார்கள் அனைத்திற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சிலம்பூர் ஊராட்சி வார்டு}1,தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி வார்டு 7,தென்கச்சிபெருமாள் நத்தம் வார்டு4 ஆகிய உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.
    • ஜூலை 12 -ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரெட்டிப்பாளையம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், திருமானூர் ஊராட்சி ஒன்றியத்தில் கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி வார்டு6, செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் நாகல்குழி ஊராட்சி வார்டு1, துளார் ஊராட்சி வார்டு6,

    ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் கழுவந்தோண்டி ஊராட்சி வார்டு6, மேலணிக்குழி ஊராட்சி வார்டு7, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியத்தில் இடையக்குறிச்சி வார்டு7, சிலம்பூர் ஊராட்சி வார்டு}1,தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் சாத்தம்பாடி ஊராட்சி வார்டு 7,

    தென்கச்சிபெருமாள் நத்தம் வார்டு4 ஆகிய உறுப்பினர் பதவியிடங்களுக்கு ஜூலை 9 ஆம் தேதி தற்செயல் தேர்தல் நடைபெறுகிறது.ஜூலை 12-ந்தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது.

    எனவே, அரியலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பா ட்டு அறையிலுள்ள 04329-228902 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என கூறினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×