search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே தண்டவாளம்"

    • ஊட்டுவாழ் மடம் கேட் இன்று முதல் 2 நாட்கள் மூடல்
    • ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் அருகே ஊட்டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற கிராமங்கள் உள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரு கிறார்கள்.

    இந்த கிராமங்களில் உள்ளவர்கள் ஊட்டு வாழ்மடம் அருகே உள்ள ரெயில்வே கேட்டை கடந்து தான், நாகர்கோவில் வர வேண்டும். ரெயில் நிலையம் அருகில் இருப்பதால், ரெயில்கள் என்ஜின் மாற்றும் போது கூட ரெயில்வே கேட் மூடப்பட்டு இருக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 13 மணி நேரம் இந்த ரெயில்வே கேட் பூட்டியே இருக்கும். இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரும் சிரமம் அடைந்தனர். எனவே இந்த பகுதியில் சுரங்க நடைப் பாதை அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து ஊட்டுவாழ்மடத்தில் சுமார் ரூ.4.5 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க முடிவு செய்யப் பட்டது. இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் பணிகள் தொடங்கின. முதலில் சுரங்கப்பாதை பணிக்காக ரெயில்வே கேட் 4 மாதங்கள் வரை மூடப்படும் என்றும், மக்கள் மாற்றுபாதையில் செல்ல வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    ரெயில்வே கேட்டை மூடினால் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலையில் உள்ளது. எனவே ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைத்து ரெயில்வே கேட் வசதி ஏற்படுத்தி விட்டு, பணிகளை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊட்டு வாழ்மடம் ரெயில்வே கேட் அருகிலேயே தற்காலிக பாதை அமைக்கப்பட்டது. தற்காலிக பாதையில் தனி யாக ரெயில்வே கேட் அமைக்கப்பட்டது. இந்த பணிகள் எல்லாம் முடி வடைந்ததை தொடர்ந்து தற்போது சுரங்கம் அமைக்க மண் தோண்டும் பணி கடந்த 2 நாட்களாக நடந்து வருகிறது.

    இந்த சுரங்கப்பாதை சுமார் 8 மீட்டர் அகலத்திலும், 4.5 மீட்டர் உயரத்திலும் சுமார் 80 மீட்டர் நீளத்திலும் சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது.

    சுரங்கப்பாதை பணிக் காக இன்றும், நாளையும் தற்காலிக ரெயில்வே கேட்டும் மூடப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப் பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து இன்று காலை ரெயில்வே கேட் மூடப் பட்டது. ரெயில்வே கேட் மூடப்பட்டதையடுத்து சுரங்க பாதைக்கான பணி கள் தீவிரப்படுத்தப்பட்டது. சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தில் 4 தண்ட வாளங்கள் உள்ளது. ஏற்கனவே 3 தண்ட வாளங்களில் கர்டர் பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் ஒரு தண்ட வாளத்தில் கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகளை ஊழியர்கள் மேற் கொற்கண்டு வருகிறார்கள். தண்டவா ளங்களையொட்டி உள்ள ஜல்லிகள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டு கர்டர் பாலம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

    காலை தொடங்கி இரவு பகலாக அந்த பாலப் பணியை 2 நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர். கர்டர் பாலம் அமைக்கப்பட்ட பிறகு தண்டவாளத்தின் கீழ் பகுதிகளில் மணல்களை எடுத்துவிட்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான பணி தீவிரப்படுத்தப்படும். கர்டர் பாலம் 4 தண்டவாளங்களி லும் அமைத்துவிட்டால் ரெயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இருக்காது. சுரங்கப்பாதை பணிகளும் தொய்வின்றி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்தார்
    • பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    நாகர்கோவில் :

    குழித்துறை ரெயில்வே தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிணமாக கிடந்தவர் மதுரை காஞ்சரம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.

    என்ஜினீயரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவையில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொள்வ தற்காக சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்த பால கிருஷ்ணன் மனமுடைந்து காணப்பட்டார். வேலை கிடைக்காத விரக்தியில் இருந்த அவர் வீட்டிலிருந்து வெளியேறி உள்ளார்.

    மாயமான அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் குழித்துறை பகுதிக்கு வந்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்துள்ளது. போலீசார் பாலகிருஷ்ணன் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    • நேற்று இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில் :

    ஆரல்வாய்மொழி பகுதியில் ெரயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாளத்தில் பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டது.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.
    • பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை அருகே கட்டியாவயல் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் நேற்று இரவு பிணமாக கிடந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் மற்றும் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில் பிணமாக கிடந்தவர் கொசளக்குடியை சேர்ந்த காசிராஜன் (வயது 31) என தெரியவந்தது. அவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்துக்கொண்டாரா? என ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    • ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.

    உடுமலை:

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -

    ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.

    ×