என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "உலா வந்த கரடி"
- கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
- கரடி வந்து செல்லும் காட்சி சி.சி.டிவி காட்சியில் பதிவாகியது.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கரடிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.
குறிப்பாக உணவு, மற்றும் தண்ணீருக்காக குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்னர். கோத்தகிரி அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி உலா வந்துள்ளது. கரடி வந்து செல்லும் காட்சி அங்குள்ள சி.சி.டிவி காட்சியில் பதிவாகி உள்ளது. அடிக்கடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது.
- கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்
அரவேணு,
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், குட்டிகளுடன் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேசலாடா செல்லும் சாலையில் பகல் நேரத்தில் 4 கரடிகள் உலா வந்தது. சாலையில் உலா வந்த கரடிகளை கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் தொலைவிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, அதை சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சற்று நேரம் அந்த பகுதியில் உலா வந்த கரடிகள் பின்னர் அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கிராம மக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டு தனியாக வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் கரடிகளின் நடமாட்டதைக் கண்காணித்து, அவற்றை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது.
- கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது.
ஊட்டி,
முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கிறது. இந்த நிலையில் தெப்பக்காட்டில் இருந்து மசினகுடிக்கு செல்லும் சாலையில் கரடி, காட்டு யானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கடந்த சில தினங்களாக அதிகளவு தென்படுகிறது. நேற்று முன்தினம் கரடி ஒன்று சாலையோரம் வந்தது. அப்போது மசினகுடிக்கு சென்று திரும்பிய சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி கரடியை ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்தனர். இதனால் கரடி வந்த வழியாக திரும்பி சென்றது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, சாலையில் வாகனங்களில் செல்லும்போது வனவிலங்குகள் நிற்பதை கண்டு ரசிப்பது தவறு இல்லை. ஆனால், வாகனங்களை எந்த காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது. காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் எளிதில் தாக்கும் குணம் உடையவை. தற்போது கரடி நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே, வனவிலங்குகளுக்கு இடையூறு செய்யக்கூடாது. விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
- உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
- இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது.
அரவேணு :
கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடிகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் கரடிகள், அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து விடுகின்றன.
இந்த நிலையில் நேற்று கோத்தகிரி அருகே உள்ள கன்னிகாதேவி காலனி பகுதியில் 2 குட்டியுடன் சாலையில் பெரிய கரடி ஒன்று உலா வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சற்று தொலைவிலேயே தங்களது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்திய வாகன ஓட்டிகள், தங்களது செல்போனில் கரடிகளை வீடியோ எடுத்தனர்.
பின்னர் அதனை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், இந்த கரடி பல மாதங்கள் இங்கு தான் சுற்றி திரிகின்றது. குட்டிகளுடன் இருப்பதால் மக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் சாலைகளில் குட்டிகளுடன் உலா வரும் கரடிகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்