search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளத்தில்"

    • குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
    • தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    தக்கலை:

    தக்கலை அருகே பரைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பொன் நாடார். இவரது மனைவி ஆர்தர் செல்வி (வயது 72). இவர் குழித்துறை தபால் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது தக்கலை அருகே குன்னத்துகோணம் பகுதியில் இருக்கும் மகள் டெய்சி வீட்டில் வசித்து வருகிறார். ஆர்தர் செல்வி தினமும் அருகில் உள்ள குன்னத்துகுளத்தில் குளிப்பது வழக்கம்.

    வழக்கம்போல நேற்று அதிகாலை 5 மணிக்கு குளத்தில் குழிப்பதற்கு சென்றவர் நிலை தடுமாறி குளத்தில் விழுந்தார். மழை நேரம் என்பதால் குளத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் வரத்து அதிகமானதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் இவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு ஏற்கனவே ஆர்தர் செல்வி இறந்துவிட்டதாக கூறினார்.

    இதுசம்பந்தமாக உறவினர் டெய்சி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்டனர்.
    • கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது.

    கன்னியாகுமரி:

    கொட்டாரத்தில் பத்திரப் பதிவு அலுவலகம் செல்லும் சாலை முடியும் பகுதியில் அண்ணாவி குளம் உள்ளது. இந்த குளத்தில் உள்ள மறுகால் ஓடை மற்றும் பொதுமக்கள் குளிக்கும் படித்துறை உடைந்து சேதம் அடைந்த நிலையில் பல ஆண்டுகளாக பராமரிக்கப் படாமல் கிடந்தது. இதனால் பொதுமக்கள் குளத்தில் குளிக்க முடியாமலும், விவசாயம் செய்ய முடியாமலும் பாதிக்கட்ட னர். இதைத் தொடர்ந்து குளத்தின் படித்துறை மற்றும் மறுகால் ஓடையை சீரமைக்க வேண்டும் என்று அந்த பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். விவசாயிகளின் இந்த கோரிக்கையை ஏற்று சமூக ஆர்வலர் வக்கீல் சந்திர சேகரன் ஏற்பாட்டில் மறு கால் சீரமைப்பு பணி தொடங்கியது.

    இந்த பணியை அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கொட்டாரம் பேரூர் தி.மு.க. செயலாளர் வைகுண்ட பெருமாள், கொட்டாரம் பேரூராட்சி துணை தலைவி விமலா, நகர காங்கிரஸ் தலைவர் செந்தில்குமார், தி.மு.க. ஒன்றிய பிரதிநிதி மதி, காங்கிரஸ் வட்டார துணை தலைவர் அரி கிருஷ்ண பெருமாள், தி.மு.க. நிர்வா கிகள் முருகன், சாமிநாதன், மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.
    • லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார்.

    ஈரோடு,

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த கர ளவாடி தேவி நகரை சேர்ந்த வர் பசுவராஜ் (60). திருமண மாகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகன் திருமணமாகி தந்தையுடன் வசித்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் தனியாக வசித்து வருகிறார். 2-வது மகன் லிங்கண்ணா (32). கூலி வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்நிலையில் லிங்கண்ணாவுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடிப்பதற்கு தாய் தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று வேலைக்கு செல்லா மல் கரளவாடி பஸ் நிறுத்தம் அருகே இரவில் உட்கார்ந்து இருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்த லிங்கண்ணா குடிப்பதற்கு மீண்டும் பெற்றோரிடம் பணம் கேட்டு உள்ளார். அதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.

    பின்னர் லிங்கண்ணாவை சாப்பிட அவரது தாய் அழைத்தார். உனது சாப்பாடு எனக்கு தேவை இல்லை. குடிப்பதற்கு பணம் தரவில்லை என்றால் இனிமேல் வீட்டுக்கு வர மாட்டேன். தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி வீட்டின் பின்பக்கம் உள்ள குளத்தை நோக்கி லிங்கண்ணா வேகமாக ஓடினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகன் பின்னால் வேகமாக ஓடினர். ஆனால் அதற்குள் லிங்கண்ணா குளத்தில் குதித்து விட்டார். இதனால் பதறிய அவரது பெற்றோர் இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குள் லிங்கண்ணா குளத்தில் மூழ்கி இறந்து விட்டார்.

    இது குறித்து சத்திய மங்கலம் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் தேடிலிங்கண்ணாவை பிணமாக மீட்டனர். பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

    இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.
    • இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்த நல்லூர் கிராமத்தில் புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் உள்ள சாய ப்பட்டறை மற்றும் அப்பகுதி ரசாயன கழிவுகள் சாக்கடை வடிகாலில் கலப்பதாகவும் அந்த கழிவுகள் நல்லூர் குளத்தின் நீரில் கலப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    இது குறித்து அதிகாரி களிடம் மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என மக்கள் புகார் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் புளியம்பட்டி எஸ்.ஆர்.டி. அருகே உள்ள நகராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் வடிகாலில் டிப்பர் லாரியில் மண் கொண்டு வந்து கழிவு நீர் வடிகாலை தடுத்து அடை த்தனர்.

    தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் விவசாயிகள், பொதுமக்கள் சமாதானம் அடையவில்லை. குளத்தில் வந்து கழிவுநீர் கலப்பதால் மண்ணை கொட்டி அடைத்துள்ளோம் என தெரிவித்தனர்.

    இதில் பொதுமக்கள் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.
    • இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை பகுதியில் யானை, மான், கரடி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனப்பகுதியை ஒட்டி உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றது. குறிப்பாக யானை அதிகவில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் தாமரைக்கரை ஒட்டியுள்ள துரனாம் பாளையம் பகுதியில் ஊருக்குள் வலம் வந்த ஒற்றை யானை தாமரைக்கரை குளம் பகுதியில் தண்ணீர் குடித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது.
    • புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    தாளாவடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. குறிப்பாக இந்த வனச்சரகத்தில் மான், யானை, புலி, காட்டெருமை, செந்நாய், சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்த வனப்பகுதி வழியாகத்தான் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வனவிலங்குகள் கணக்கெடுப்பில் புலி மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    இந்த மலைப்பாதையில் அவ்வப்போது இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் புலிகள் நடமாடுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. அப்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிறுத்தை நடமாட்டத்தை கண்டு அச்சமடைந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பெளத்தூர் அருகே உள்ள ஒரு குளத்தின் அருகே புலி ஒன்று ஹாயாக படுத்திருந்தது. இதை குளத்தின் மறுபக்கம் இருந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். பின்னர் சிறிது நேரம் கழித்து புலி அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

    இந்நிலையில் புலிகள் நடமாட்டம் காரணமாக இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே வில்லுக்குறி அடுத்த குதிரைப்பந்திவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லபெருமாள். இவரது மனைவி செல்லதங்கம் (வயது 65). இவர் மகன் ஸ்ரீகுமார் பராமரிப்பில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் செல்லத்தங்கம் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள ஊத்துக்குளி குளத்திற்கு குளிக்க சென்றார்.‌ அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சத்தம் எழுப்பவே இளைஞர்கள் செல்லதங்கம் உடலை மீட்டு ஆட்டோவில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், செல்லதங்கம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து ஸ்ரீகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×