என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவி தாக்குதல்"
- பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது.
- காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார்.
மாமல்லபுரம்:
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், இவரது மகள் மோனிஷா (வயது 15). இவர் மாமல்லபுரம் அடுத்துள்ள பூஞ்சேரி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை 4.30 மணி முதல் 5.15 மணி வரை நடந்த ஆங்கிலம் சிறப்பு வகுப்பில் பயின்றுவிட்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் தனது வீட்டுக்கு செல்வதற்காக தாம்பரத்தில் இருந்து மாமல்லபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏற முயன்றார். பஸ்சில் நிற்க கூட இடம் இல்லாத நிலையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி மோனிஷா படிக்கட்டில் நின்று கொண்டு நெரிசலில் சிக்கி தவித்தார்.
பயணிகள் ஏறும் முன்பே பஸ் திடீரென இயக்கப்பட்டு எலக்ட்ரானிக் கதவு மூடப்பட்டது. பஸ்சில் கூட்டம் முண்டியடித்தால் எரிச்சலடைந்த அந்த பஸ் கண்டக்டர் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த மோனிஷாவை கன்னத்தில் பளார் பளார் என 3 முறை தாக்கி தனது கோபத்தை அந்த மாணவியின் மீது காட்டியுள்ளார்.
காது வலியால் துடித்த மோனிஷா தனது பெற்றோரிடம் கண்டக்டர் தன் கன்னத்தில் அறைந்த தகவலை தெரிவித்தார். பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், தனது பெற்றோருடன் மாமல்லபுரம் போலீஸ் நிலையம் வந்த மாணவி மோனிஷா தன்னை தாக்கிய கண்டக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் செய்தார். இதையடுத்து மாமல்லபுரம் போலீசார் தாம்பரம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் அனுப்பி சம்பந்தப்பட்ட கண்டக்டர் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மேடவாக்கம் பேருந்து நிலையத்தில் மாணவி காத்திருந்தார்.
அப்போது அங்கே வந்த ஒரு இளைஞர், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு மாணவியை இழுத்துச் சென்றுள்ளார். அப்போது தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தியுள்ளார். அப்போது அந்த பெண் காதலிக்க மறுத்தபோது, அந்த வாலிபர் பெண்ணின் கை, கால், முகத்தில் கத்தியால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
குரோம்பேட்டையில் முதலுதவி பெற்று, ஸ்டான்லி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
- மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.
கோவை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் 21 வயது மாணவி. இவர் கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 5-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் பல்வேறு இடங்களுக்கு சென்றும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் மாணவரின் நடவடிக்கைகள் மாணவிக்கு பிடிக்காமல் போனது. இதனையடுத்து அவர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாணவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்தார்.
இதன் காரணாக ஆத்திரம் அடைந்த மாணவர், கல்லூரி வளாகத்தில் வைத்து மாணவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
சம்பவத்தன்று மாணவி வழக்கம் போல கல்லூரி முடிந்ததும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் மாணவியிடம் ஏன் என்னுடன் பேச மறுக்கிறாய். நீதான் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மாணவர், மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து தலையை தரையில் தாக்கினார்.
இதனை பார்த்த அந்த வழியாக சென்ற மாணவர்கள் அவரை தடுத்து மாணவியை மீட்டனர். மாணவர் தாக்கியதில் மாணவியின் பின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதனையடுத்து மாணவியை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார், மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.
- அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அம்பத்தூர்:
கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதில் கொரட்டூரை சேர்ந்த ஐ.டி. ஊழியர் சத்யா என்பவரது மகள் கீர்த்தனா (11) 4-ம் வகுப்பு பயின்று வருகிறார்.
நேற்று காலை வீட்டு பாடத்தை சோதனை செய்த போது மாணவி கீர்த்தனா தமிழ் பாடத்தில் வீட்டு பாடம் எழுதவில்லை. இதனால் வகுப்பறையில் வைத்திருந்த பிரம்பால் மாணவியின் வலது கால் மற்றும் இடது கையில் ஆசிரியை தாறுமாறாக அடித்துள்ளார். இதனால் குழந்தைக்கு கை காலில் பலத்த வீக்கம் ஏற்பட்டு ரத்தம் கட்டியது.
மாணவி கீர்த்தனா மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த தந்தையிடம் வகுப்பு ஆசிரியை தன்னை அடித்ததாக தெரிவித்து உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த தந்தை சத்யா இது பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆசிரியை மீது கொரட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட கொரட்டூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் குழந்தையை தாக்கிய ஆசிரியை குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்