என் மலர்
நீங்கள் தேடியது "அவசர ஆலோசனை கூட்டம்"
- மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை.
- கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மாலை 4.30 மணியளவில் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தினார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எடுக்கப்பட்டுள்ள கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
ஆலோசனையின்போது, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அறிவுறுத்தல்கள் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தலைமை செயலாளர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
அப்போது, காணொலி காட்சி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.
- பெரியகுளத்தில் அ.தி.மு.க நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியகுளம்:
பெரியகுளத்தில் அ.தி.மு.க நகர நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர அவை தலைவர் கோம்பையன் தலைமை வகித்தார். நகர செயலாளர் அப்துல்சமது அனைவரையும் வரவேற்றார்.
அ.தி.மு.க.விற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை ஏற்று வழிநடத்த வேண்டும் எனவும், நடைபெற்று முடிந்த பொது குழுவில் தொண்டர்களுக்கு அவமரியாதை ஏற்படும் வகையில் செயல்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை வன்மையாக கண்டிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும் நடைபெற்று முடிந்த நகர வார்டு உட்கட்சி தேர்தலில் நிர்வாகிகளாக நியமனம் செய்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் அ.தி.மு.க நகர் மன்ற வழிகாட்டுதல் குழு தலைவர் ஓ.சண்முகசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட பிரதிநிதி அன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.