search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறை கேட்பு கூட்டம்"

    • புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

    • குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற உள்ளது
    • மக்கள் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம்

    விழுப்புரம்:

    திண்டிவனம் வட்டத்தில் 1432-ம் பசலிக்கான வரு வாய்த் தீர்வாயம், வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் விழுப்புரம், உதவி ஆணையர் (கலால்) தலை மையில், குறை கேட்பு கூட்டம் வருகிற 7-ந் தேதி முதல்15-ந் தேதி வரை (சனி, ஞாயிறு விடு முறை நாட்கள் நீங்களாக) திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தினசரி காலை 10மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது. திண்டிவனம் வட்டத்திற் குட்பட்ட கிராம பொது மக்கள் இந்த நாட்களில் தங்கள் குறைகளை மனு வாக அளித்து பயன் பெற லாம் என திண்டிவனம் தாசில்தார் அலெக் சாண்டர் தெரிவித்துள்ளார்.

    • தேனி மாவட்டத்தில் நாளை மறு நாள் 9-ந் தேதி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
    • புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும். என கலெக்டர் முரளிதரன், தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நாளை மறு நாள் 9-ந் தேதி பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் பெரியகுளம் வட்டத்தி ற்குட்பட்ட முருகமலை- நேருநகர் பகுதி மக்களுக்கு முருகமலை சமுதாய க்கூடத்திலும், தேனி வட்டத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் என்.ஆர்.தியாகராஜன் நினைவு தொடக்கப்பள்ளியி லும், ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட நரியூத்து கிராமத்தில் சமுதாயக்கூ டத்திலும், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட கோகிலாபுரம் கிராமத்தில் மகளிர் சுகாதார வளாகத்தி லும், போடி வட்டத்தி ற்குட்பட்ட அணைக்கரை ப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவல கத்திலும் நடைபெறவுள்ள ளது.

    இம்முகாம்களில் பார்வையாளர்களாக முருகமலை கிராமத்திற்கு தனித்துணை ஆட்சியர் சாந்தி, கோபாலபுரம் கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சாந்தி, நரியூத்து கிராமத்திற்கு மாவட்ட பிற்படுத்தப்ப ட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலர் செல்வராஜ், கோகிலாபுரம் கிராமத்திற்கு உத்தமபாளை யம் வருவாய் கோட்டாட்சியர் கவுசல்யா, அணைக்கரை ப்பட்டி கிராமத்திற்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இக்குறைகேட்கும் கூட்டத்தில் பொதுமக்கள் பொது விநியோக கடைகள் சம்பந்தமான குறைபாடுகள் குறித்தும், குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம் மற்றும் கடைமாற்றம் குறித்தும் மனுசெய்யலாம். பொதுமக்கள் தங்கள் குறைகளை முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் மற்றும் ரேசன் கடை நடத்தும் நிறுவன அலுவல ர்களுக்கு மனு மூலமும் தெரிவிக்கலாம்.

    முன்கூட்டியே பெறப்ப டும் புகார்கள் மற்றும் குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு உடனுக்குடன் அவை தீர்வு செய்யப்படுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டு கூட்ட நாள் அன்று பொதுமக்களுக்கு நட வடிக்கை விவரம் தெரி விக்கப்படும்.

    மேலும் கூட்டநாள் அன்று பெறப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும். என கலெக்டர் முரளிதரன், தெரிவித்துள்ளார்.

    ×