search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொடர்ந்து மழை"

    • கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.
    • குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழைபெய்து வருகிறது.

    குறிப்பாக ஏற்காடு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு கடுங்குளிர் மற்றும் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. தலைவாசல், கரியகோவில், வீரகனூர், கெங்கவல்லி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இதன் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது

    மழை அளவு

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக தலைவாசலில் 19 மி.மீ. மழை பெய்தது. இதே போல் வீரகனூர்-5, கெங்கவல்லி-3, எடப்பாடி-1 என மாவட்டம் முழுவதும் 37 மி.மீ. மழை பெய்தது.

    • கேரளாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • இதனால் பெரியாறு அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கூடலூர்:

    கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.

    குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை நிலவரப்படி 128.40 அடியாக உள்ளது. நேற்று 1509 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2122 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து 1611 கன அடி நீர் வெளியேற்ற ப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 4352 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவ தாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் நேற்று 54.59 அடியாக இருந்தது.

    இன்று காலை 55.32 அடியாக உயர்ந்துள்ளது. நீர் வரத்து 1612 கன அடி மதுரை குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு என மொத்தம் 969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 2770 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாக வும், சோத்து ப்பாறை அணை நீர் மட்டம் 76.26 அடியாகவும் உள்ளது.

    பெரியாறு 43, தேக்கடி 28, கூடலூர் 4.7, உத்தமபாளையம் 4.8, வீரபாண்டி 3.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    ×