search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறந்து கிடந்த வாலிபர்"

    • 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்த ப்பாடி- பவானி ரோடு சுண்ணாம்பு சூலை பைபாஸ் ரோடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை இறந்து கிடந்தார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அவரது இடது கையில் தனா என்ற பெயரும், வலது ைகயில் பாயும் புலி என்ற முத்தி ரையும் பச்சை குத்தப்பட்டு இருந்தது. பச்சை கட்டம் போட்ட சர்ட்டும், கைலியும் கட்டி இருந்தார். மேலும் அவரது கணத்தில் காயம் இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து கிடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தொலை வில் டாஸ்மாக் மதுக்கடை இருந்தது.

    இதனால் அதிக அளவில் மது குடித்து இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? இல்லை அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    • பாலத்தின் அடியில் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஓசூர் சாலையில் கிருஸ்தவ ஆலயம் அருகில் உள்ள பாலத்தின் அடியில் 35 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பாலக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார்.
    • இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு அருகே உள்ள ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்கு மார்(27). இவருக்கு திருமணமாகிவிட்டது. மோகன்குமாருக்கு குடிபழக்கம் இருந்து வந்துள்ளது. மோகன்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தகராறில் ஈடுபடுவது வழக்கம்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மோகன் குமார் வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின் கசிவால் ஏற்பட்ட தீயை மோகன்குமார் அனைத்து விட்டு மின் ஓயரை கம்பால் அடித்து துண்டித்து விட்டு ரோட்டில் நின்று தகராறில் ஈடுபட்டார்.

    பின்னர் இரவு தூங்கு சென்று விட்டார். மறுநாள் காலை மோகன்குமார் மனைவி எழுந்து பார்த்தபோது மோகன் குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். அவரது நெற்றில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்திருந்தது. குடிபோதையில் கீழே விழுந்தாரா? அல்லது மின் கசிவால் ஏற்பட்ட மின் ஒயரை கம்மல் அடித்தபோது அதனால் காயம் ஏற்பட்டதா? என்று தெரியவில்லை.

    இது குறித்து வெள்ளோடு போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மோகன்குமார் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மோகன்குமார் சாவுக்கான உண்மையான காரணம் தெரிய வரும் போலீசார் தெரிவித்தனர்.

    ×