என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிய நிர்வாகிகள் பதவியேற்பு"
- புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
- மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு புதிய தலைமுறை ரோட்டரி சங்கத்தின் 2023- 24 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தன்ராஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார்.
ரோட்டரி மாவட்டம் 3000-ன் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஆளுநர் கார்த்திக் மற்றும் பெண்கள் மேம்பாட்டு பிரிவு தலைவர் மீனா சுப்பையா, உதவி ஆளுநர் கிருபா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் புதிய தலைவராக டாக்டர். சதீஷ்குமார், செயலாளராக டாக்டர் முருகேசபாண்டியன், பொருளாளராக பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் முருகேசன், முகமது நஜ்முதீன், ராஜ்குமார், பத்ரிநாராயணன், கிருஷ்ணமூர்த்தி, காசி ஜெயராமன், பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்மலிங்கம் மற்றும் பல்வேறு சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். விழா முடிவில் செயலாளர் முருகேசபாண்டியன் நன்றி கூறினார்.
- வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
- நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு ஈடன் கார்டன் லயன்ஸ் சங்கபுதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவுக்கு சங்கத் தலைவர் செந்தில்கு மார் தலைமை வகித்தார். புதிய தலைவர் பாக்யராஜ், செயலாளர் கஸ்தூரிராஜா, பொருளாளர் சீனி ராஜன் ஆகியோருக்குமுன்னாள் ஆளுநர் தங்கராஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
முன்னாள் மண்டல தலைவர் நாகராஜன் 3 புதிய உறுப்பினர்களைசங்கத்தில் இணைத்து வைத்து பேசி னார்.முன்னாள் மண்டல தலைவர் ராஜ்மோகன் சேவை திட்டங்களை தொடங்கி வைத்தார். விரிவாக்க தலைவர் கென்னடி, மண்டல தலைவர் டாக்டர் பொன்.அண்ணாதுரை, லயன்ஸ் நிர்வாகி சிவகுமார் ஆகி யோர் வாழ்த்தி பேசினர்.
புதிய தலைவர் பாக்ய ராஜ் ஏற்புரை ஆற்றினார். சங்க உறுப்பினர் சரண்யா செந்தில்குமார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள் நடந்தது.விழாவில் வத்தலக்குண்டு தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன், பேரூராட்சி தலைவர் சிதம்பரம், துணைத் தலைவர் தர்ம லிங்கம்,வெற்றிலை நகர் லயன்ஸ் கிளப் நிர்வாகிதிருமணி, ரோட்டரி கிளப் நிர்வாகி நஜ்முதீன், ஈடன் கார்டன் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் ஆண்ட வர், சக்திவேல், முரளி, சரவணன், நாகேந்திரன், வினோத், கலைச்செல்வன், இன்பராஜ் மற்றும் தியாகிசுப்பிரமணிய சிவா நற்பணிசங்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் ஜெர்மன் ராஜா தொகுத்து வழங்கினார்.
முடிவில் புதிய பொருளாளர் சீனி ராஜன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்