என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » பங்கேற்க தடை
நீங்கள் தேடியது "பங்கேற்க தடை"
- மாணவியின் இறுதி சடங்கில் வெளியூர் ஆட்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர்.
கடலூர்:
சின்னசேலம் பள்ளியில் இறந்த மாணவியின் ஸ்ரீமதியின் உடல் இன்று காலை 6.50 மணிக்கு பெற்றோரிடம் ஒப்டைக்கப்பட்டது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் வேன் மூலம் மாணவியின் சொந்த ஊராக பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மாணவியின் உடல் இன்று கொண்டு வரபடுவதையொட்டி ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முயன்றனர். இதனை அறிந்த போலீசார் மாணவியின் சொந்த ஊரில் குவிக்கப்பட்டனர். அப்போது போலீசார் ஜீப் மூலம் வெளியூர் நபர்கள் யாரும் மாணவியின் ஊருக்கு வரவேண்டாம். அப்படி மீறி வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். அதனை தொடர்ந்து வெளியூர் நபர்கள் வருவது கண்காணிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து மாணவியின் ஊர் வரை போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பெரியநெசலூர் கிராமத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
×
X