search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆவின் இனிப்புகள்"

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகள்.
    • பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகம்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்புகள் விற்பனையில் சிறப்பு சலுகைகளை ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, பல்வேறு இனிப்புகள் அடங்கிய காம்போ ஆஃபர்களை ஆவின் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    அதில், மைசூர்பாகு 250 கி, மிக்சர் 200 கி, ஆவின் குக்கீஸ் 80 கி, ரூ.10 சாக்லேட் -1 அடங்கிய காம்போ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல், நெய் பாதுஷா 250 கி, பாதாம் மிக்ஸ் 200 கி, குலாப் ஜாமூன் 250 கி, மிக்சர் 200 கி, ரூ.10 சாக்லேட் -1 காம்போ ரூ.500க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    தொடர்ந்து, காஜு பிஸ்தா ரோல் 250 கி, காஜூ கட்லி 250 கி, நெய் பாதுஷா 250 கி, முந்திரி அல்வா 250 கி ஆகிய இனிப்புகள் அடங்கிய காம்போ ரூ.900க்கு சிறப்பு சலுகையில் விற்பனையாகிறது.

    • அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார்.
    • கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் நிறுவனத்தில் ரூ.200 கோடிக்கு இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 9 வகையான இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.

    அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள ஆவின் பால் பண்ணையில் அமைச்சர் சா.மு. நாசர் ஆய்வு செய்தார். அப்போது இனிப்புப் பொருட்களை பேக்கிங் செய்யும் புதிய எந்திர பணிகளை இயக்கி வைத்தார்.

    அதை தொடர்ந்து அவர் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் 9 வகையான இனிப்புகளும், கார வகைகளில் மிக்சர் உள்ளிட்ட காம்போ பேக் விற்பனைக்கு தயார் செய்யும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

    சிறப்பு இனிப்புகள் விலை விவரம்:

    நெய் பாதுஷா

    250 கிராம்

    ரூ.190

    ஸ்பெஷல் நட்ஸ் அல்வா

    250 கிராம்

    ரூ.190

    மோதி பபாக்

    250 கிராம்

    ரூ.180

    காஜு பிஸ்தா ரோல்

    250 கிராம்

    ரூ.320

    காஜு கட்லி

    250 கிராம்

    ரூ.260

    நெல்லை அல்வா

    250 கிராம்

    ரூ.125

    கருப்பட்டி அல்வா

    250 கிராம்

    ரூ.170

    வகைப்படுத்தப்பட்ட இனிப்புகள்

    500 கிராம்

    ரூ.450

    ஆவின் மிக்சர்

    200 கிராம்

    ரூ.100

    பின்னர் அமைச்சர் நாசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஆண்டு 6 வகை இனிப்பு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு 9 வகையான இனிப்பு வகைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கடந்த ஆண்டு ஆவின் பொருட்களின் விற்பனை ரூ.82.24 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆண்டு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் அதற்கான அனைத்து விற்பனை யுக்திகளை கையாளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூட்டுறவு அரசு நிறுவனங்கள், போக்குவரத்து துறை அரசுத்துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் ஆவின் நிறுவனத்தில் இனிப்புகளை வாங்க வேண்டும் என்ற உத்தரவின் கீழ், ஆவின் பொருட்களின் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேலும் அம்பத்தூர் மட்டுமல்லாமல் திருவள்ளூர், கோயம்புத்தூர், விழுப்புரம், திருச்சி, சேலம், நாமக்கல், மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் நிறுவன கிளைகள் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சிறப்பு விற்பனைக்கு தொலைபேசி மூலம் பதிவு செய்தால், இலவசமாக வீட்டுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பால்வளத்துறை ஆணையரும், மேலாண்மை இயக்குனருமான சுப்பையன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்த ராஜன், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு வகையான ஆவின் இனிப்புகள் விற்கப்படுகின்றன.
    • எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் இனிப்பு வகைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன.

    சென்னை:

    ஆவின் பால், பால் பொருட்கள், இனிப்பு வகைகள் தரமாக இருப்பதோடு தனியாரை விட விலை குறைவாக இருப்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளது.

    தனியார் நிறுவனங்களின் பால், தயிர் மற்றும் ஐஸ்கிரீம் வகைகள் ஆவினை விட பலமடங்கு அதிகமாக விற்கின்றன.

    இந்த நிலையில் மூலப்பொருட்களின் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவு அதிகரிப்பின் காரணமாக நெய், தயிர், மோர் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை கடந்த மாதம் உயர்த்தப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து தற்போது ஆவின் இனிப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளன.

    தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு வகையான ஆவின் இனிப்புகள் விற்கப்படுகின்றன. அவற்றுக்கு இன்று (16-ந்தேதி) முதல் புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக நிர்வாக இயக்குனர் சுப்பையா தெரிவித்துள்ளார்.

    எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் இனிப்பு வகைகள் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. ரூ.120-க்கு விற்கப்பட்ட 250 கிராம் மைசூர்பாகு ரூ.140 ஆகவும், அரைகிலோ மைசூர்பாகு ரூ.230-ல் இருந்து ரூ.270 ஆகவும், மில்க்பேடா 100 கிராம் ரூ.55 ஆகவும், 250 கிராம் ரூ.130 ஆகவும் அதிகரித்துள்ளது.

    சுவீட் இல்லாத கோவா அரைகிலோ ரூ.300, ஒரு கிலோ ரூ.600 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேரிச்சம்பழம் கோவா அரை கிலோ ரூ.270, 100 கிராம் ரூ.140-க்கும், கோவா 100 கிராம் ரூ.50, கால் கிலோ ரூ.130, அரைகிலோ ரூ.250 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

    குலோப்ஜாமுன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளன. புதிய விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

    • ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வலியுறுத்தல்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கும் காஜூ கட்லீ (250 கி) நட்டி அல்வா (250 கி) மோத்தி பாக் (250 கி) காஜு பிஸ்தா ரோல் (250 கி)

    நெய் பாதுஷா (250 கி) கார வகைகள் இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதன் பொருட்டு தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க அமைச்சர் உத்தரவிட்டார். கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுக படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

    கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82.00 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டியே திட்டமிடவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

    பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள அமைச்சர் வலியுறுத்தினார். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்திரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களை பெறுவது குறித்து விறைந்து நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.

    ×