என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீபாவளி பண்டிகைக்கு ஆவின் இனிப்பு வகைகளை ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டம்- அமைச்சர் நாசர்
- ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்.
- பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வலியுறுத்தல்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சிறப்பு இனிப்பு வகைகளை விற்பனை செய்வது குறித்த ஆய்வுக் கூட்டம் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு தீபாவளியை போலவே, இவ்வாண்டு தீபாவளி பண்டிகைக்கும் காஜூ கட்லீ (250 கி) நட்டி அல்வா (250 கி) மோத்தி பாக் (250 கி) காஜு பிஸ்தா ரோல் (250 கி)
நெய் பாதுஷா (250 கி) கார வகைகள் இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)விற்பனை செய்ய திட்டமிடப்பட்டது. இதன் பொருட்டு தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவைமிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க அமைச்சர் உத்தரவிட்டார். கருப்பட்டியை பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுக படுத்தவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82.00 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளையும் கையாளவும், அரசு துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்து துறை மற்றும் பிற நிறுவனங்களுக்கு தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டியே திட்டமிடவும் அமைச்சர் எடுத்துரைத்தார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களை தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள அமைச்சர் வலியுறுத்தினார். தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்திரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களை பெறுவது குறித்து விறைந்து நடவடிக்கை மேற்கொள்ள அமைச்சர் நாசர் அறிவுறுத்தினார்.