search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் மாற்றம்"

    • போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.
    • ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர பகுதியையொட்டி காவல் நிலையங்களில் முக்கியமானது கொள்ளிடம் டோல்கேட் காவல் நிலையம். இந்த பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து சில மாதங்களாக மணல் கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக புகார் எழுந்தது.. இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் வரை ஆதாரத்துடன் சிலர் புகார் அளித்தனர்.

    அதை தொடர்ந்து, எஸ்பியின் தனிப்படை போலீசார் கொள்ளிடம் காவல் நிலையத்தில் உள்ள போலீசார் யாரெல்லாம் மணல் கடத்தல்கார்களுடன் தொடர்பில் உள்ளனர் என்று ரகசியமாக விசாரித்தனர்.

    அதில் அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் மணல் கடத்தல் கும்பலோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து எஸ்பி வருண்குமார், ஓபன் மைக்கில், "கொள்ளிடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒரு சப் இன்ஸ்பெக்டரை தவிர மீதமுள்ள போலீசார் 22 பேரையும் உடனடியாக மாவட்ட ஆயுதப்படைக்கு நேரடியாகச் சென்று ஒரு மணிநேரத்துக்குள் ரிப்போர்ட் செய்ய வேண்டும்"என்று உத்தரவு பிறப்பித்தார்.

    இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் நேற்று இரவுக்குள் மாவட்ட ஆயுதப்படைக்கு சென்று ரிப்போர்ட் செய்தனர். ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்ட இந்ந உத்தரவால் திருச்சி மாவட்ட போலீசார் பீதியில் உறைந்துள்ளனர்.

    • வேலூர் டி.எஸ்.பி. சுவாதி மதுரை மாநகர் தில்லை நகர் திடல் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
    • மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் 81 டி.எஸ்.பி.க்களை அதிரடியாக இடமாற்றம் செய்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மண்டல வாரியாக இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    அந்த வகையில் தெற்கு மண்டலத்தில் 25 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வடக்கு மண்டலத்தில் 23 அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். மத்திய மண்டலத்தில் 15 பேரும், மேற்கு மண்டலத்தில் 18 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் டி.எஸ்.பி. சுவாதி மதுரை மாநகர் தில்லை நகர் திடல் உதவி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார். விழுப்புரம் டி.எஸ்.பி. ஆனந்தராஜ் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர் டி.எஸ்.பி. மிதரன், விழுப்புரம் கோட்ட குப்பத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் டி.எஸ்.பி. மனிஷா, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாறுதலாகி உள்ளார். செங்கல்பட்டு டி.எஸ்.பி. ஸ்வேதா, சேலம் மாவட்டம் வாழப்பாடிக்கும், காஞ்சிபுரம் மனோஜ்குமார் ஊட்டிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு வசந்தகுமார் மதுரை திருமங்கலத்துக்கும், செங்கல்பட்டிலேயே பணியாற்றிய பாலகிருஷ்ணன், நாகப்பட்டினத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதே போன்று தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும், மேற்கு மண்டலம் மற்றும் மத்திய மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் பணியாற்றியவர்களும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

    இடமாற்றம் செய்யப்பட்ட 81 டி.எஸ்.பி.க்களும் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    ×