என் மலர்
நீங்கள் தேடியது "நகராட்சி அவசர கூட்டம்"
- தாரமங்கலம் நகராட்சி அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
- கூட்டத்தில் அரசு பிறப்பித்துள்ள ஆணையின் படி நகராட்சி வார்டு பகுதியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா அமைக்க உள்ளது.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி அவசர கூட்டம் கூட்ட அரங்கில் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அரசு பிறப்பித்துள்ள ஆணையின் படி நகராட்சி வார்டு பகுதி–யில் வார்டு குழு மற்றும் பகுதி சபா அமைக்க உள்ளது. அதன்படி ஒவ்வொரு வார்டிலும் 4 குழு அமைத்து 4 குழுவுக்கும் ஒரு உறுப்பினர் நியமனம் செய்யவும் அந்த குழுவுக்கு அந்தந்த வார்டு உறுப்பினரே தலைவராகவும் செயல்படுவார்.
இந்த வார்டு குழு மற்றும் பகுதி சபா மூலம் அந்தந்த பகுதியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகளை கண்டறிந்து அதனை நிறைவேற்றிடவும், வார்டு பகுதிக்கு தேவையான வளர்ச்சி பணிகளை உருவாக்கவும் ஏதுவாக அமையும்.
அதேபோல் நகராட்சி வருவாய் இனங்கள் நிலுவையில் உள்ள வரி கட்டணங்கள் போன்றவை வசூலிக்கவும் இந்த சபா வாயிலாக பொது–மக்களுக்கு அறிவுறுத்தபடும் என்று கூறப்படுகிறது. இந்த சபாவில் நிறைவேற்றபடும் தீர்மா–னங்கள் மன்ற கூட்டத்தில் வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளிலும் 4 குழுக்கள் வீதம் 108 குழுக்கள் அமைக்கப்படும், இந்த கூட்டம் வருகிற 1 -ந் தேதி முதல் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கபட்டது.
அவசர கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் சின்னு–சாமி, வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி, சுயேட்சை உறுப்பினர் ஜெயந்தி ஆகியோரை தவிர மற்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
- தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
- உறுப்பினர்கள் பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
தேனி:
தேனி அல்லிநகரம் நகராட்சி நகர் மன்ற அவசர கூட்டம் தலைவர் ரேணுபிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.
துணைத்தலைவர் செல்வம், ஆணையாளர் வீரமுத்துக்குமார், பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் விஜயன், பிரிட்டிஷ், மணிகண்டன், தினேஷ்குமார், நாராயண பாண்டியன், நாகராஜன், அய்யனார் உள்பட கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் புதிய குடிநீர் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்திட நிதி பகிர்வில் உள்ள பணிகள் உள்பட 7 கூட்ட பொருள் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் கூட்டத்தின் போது கவுன்சிலர்கள் வார்டு பகுதிகளில் உள்ள போர்வெலில் உடைந்த தண்ணீர் தொட்டிகள் சரிசெய்ய வேண்டும். சேதமடைந்த பேவர் பிளாக் கற்களை மாற்ற வேண்டும். தெரு மின்விளக்கு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதுபோல தெருக்களில் பயனற்று கிடக்கும் போர்வெல் தண்ணீர் தொட்டிகளை அகற்றி விட்டு சாலைகளை அகலப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பதில் அளித்தனர்.