என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ராகவேந்திரா கோவில்"
- சி.சி.டி.வி காமிரா காட்சிகளையும் எடுத்து சென்றனர்
- சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
சுசீந்திரம் பைபாஸ் ரோட்டில் ஸ்ரீ ராகவேந்திரா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் காலை மாலை நேரங்களில் பூஜைகள் நடந்து வருகிறது.
இந்த கோவிலில் வியாழக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக காணப்படும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து செல்வார்கள்.நேற்றும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கோவிலில் பூஜைகள் முடிந்த பிறகு பூசாரி கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.
இன்று காலையில் கோவில் மேற்பார்வையாளர் அனந்தகிருஷ்ணன் கோவிலுக்கு வந்தார்.அப்போது கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது கோவிலுக்குள் இருந்த இரண்டு உண்டியலும் உடைக்கப்பட்டு இருந்தது. உண்டியலில் இருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்று இருந்தனர் .மேலும் கோவிலில் இருந்த சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்கள் நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்து கொள்ளையடித்ததுடன் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். ராகவேந்திரா கோவிலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல்
- இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.
கன்னியாகுமரி :
சுசீந்திரம் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் ராகவேந்திரா சுவாமிகளின் 351-வது ஆராதனை விழா நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மஹா அபிஷேகம், 10 மணியளவில் ஸகலப்ரதாதா, குருஸ்தோத் ரம் பாராயணம் மஹா மங்கள ஆரத்தி நடக்கிறது. மாலையில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை பல்லக்கு மற்றும் ரதோற்சவம் சேவை, இரவு 7.15 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.
2-ம் நாள் காலை கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, காலை 6.30 மணிக்கு பால் குடம் ஏந்தி வருதல், சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல், பின்னர் கோமாதா பூஜை நடக்கிறது. காலை 10 மணிக்கு சங்கீத குயில் பேபி எம்.சன்மிதா வழங்கும் சங்கீத இசை சாரல், மகா மங்கள ஆரத்தி, பகல் 12 மணிக்கு அலங்கார பங்க்தி, மாலை 5 மணிக்கு சீர்காழி டி.எம்.எஸ்.குரல் பக்தி மெல்லிசை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.
3-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு அனிரூத் வழங்கும் பக்தி இன்னிசை, மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் சிங்காரி மேளம் முழங்க குமரி மந்த்ராலயத்தி லிருந்து பல்லக்கு பவனி சுசீந்திரம் ஆலயம் வலம் வந்து மீண்டும் குமரி மந்த்ராலயம் கொண்டு செல்லப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு ரதோற்சவம் சேவை, தியானம் ஸ்வஸ்தி வாசனம், இரவு 7.25 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.
இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதி மக்கள் 3 நாட்கள் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 நாள் 3 வேளை அன்னதானத்தில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குமரி மந்த்ராலயத்தின் சார்பில் மணிகண்டன், மந்த் ராலய உறுப்பினர்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்