search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுசீந்திரத்தில் ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா - நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
    X

    சுசீந்திரத்தில் ராகவேந்திரா கோவிலில் ஆராதனை விழா - நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது

    • சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல்
    • இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

    கன்னியாகுமரி :

    சுசீந்திரம் புறவழிச்சாலையில் அமைந்திருக்கும் ராகவேந்திரா சுவாமிகளின் 351-வது ஆராதனை விழா நாளை (12-ந்தேதி) முதல் 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மஹா அபிஷேகம், 10 மணியளவில் ஸகலப்ரதாதா, குருஸ்தோத் ரம் பாராயணம் மஹா மங்கள ஆரத்தி நடக்கிறது. மாலையில் பரத நாட்டியம், பக்தி இன்னிசை பல்லக்கு மற்றும் ரதோற்சவம் சேவை, இரவு 7.15 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.

    2-ம் நாள் காலை கணபதி ஹோமம், நிர்மால்ய பூஜை, காலை 6.30 மணிக்கு பால் குடம் ஏந்தி வருதல், சுசீந்திரம் தாணுமாலையன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பால்குடம் ஏந்தி குமரி மந்த்ராலயத்திற்கு வருதல், பின்னர் கோமாதா பூஜை நடக்கிறது. காலை 10 மணிக்கு சங்கீத குயில் பேபி எம்.சன்மிதா வழங்கும் சங்கீத இசை சாரல், மகா மங்கள ஆரத்தி, பகல் 12 மணிக்கு அலங்கார பங்க்தி, மாலை 5 மணிக்கு சீர்காழி டி.எம்.எஸ்.குரல் பக்தி மெல்லிசை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பல்லக்கு ரதோற்சவம் சேவை நடக்கிறது. பின்னர் அன்னதானம் நடைபெறுகிறது.

    3-ம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், நிர்மால்ய பூஜை, கோமாதா பூஜை, மகா அபிஷேகம், காலை 10 மணிக்கு அனிரூத் வழங்கும் பக்தி இன்னிசை, மாலை 4 மணிக்கு அலங்கார ஊர்தியுடன் சிங்காரி மேளம் முழங்க குமரி மந்த்ராலயத்தி லிருந்து பல்லக்கு பவனி சுசீந்திரம் ஆலயம் வலம் வந்து மீண்டும் குமரி மந்த்ராலயம் கொண்டு செல்லப்படுகிறது. இரவு 6.30 மணிக்கு ரதோற்சவம் சேவை, தியானம் ஸ்வஸ்தி வாசனம், இரவு 7.25 மணிக்கு மஹா மங்கள ஆரத்தி நடைபெறும்.

    இந்த கோவிலில் சுற்று வட்டார பகுதி மக்கள் 3 நாட்கள் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 3 நாள் 3 வேளை அன்னதானத்தில் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் குமரி மந்த்ராலயத்தின் சார்பில் மணிகண்டன், மந்த் ராலய உறுப்பினர்கள், பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Next Story
    ×