என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜவுளிப்பூங்கா"
- சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.
- தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,
ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின்கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பலதிட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காஅமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின்மானியமாக வழங்கப்படுகிறது. தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையைத் தொடர்ந்து தகுதிவாய்ந்த திட்டமதிப்பீட்டில் ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்ப தற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான தொழிற்பூங்காக்கள் அமைத்து நடுத்தர நிறுவனங்களின்மூலம் வளர்ச்சி ஏற்பட்டு வேலைவாய்ப்பு பெருகும்.மேலும் அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். இது முதல்அமைச்சரின் கனவுத் திட்டம் ஆகும்.
எனவே சிறிய அளவிலானஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தி தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும் வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும் அனைத்து தொழில் முனைவோரும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், 30/3 நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம்தாந்தோணிமலை கரூர் 639005. கைபேசி எண்: 9444656445ரூபவ் 9092590486.