search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலை சேதம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வங்காள தேசத்தில் காளி கோயிலுக்குள் புகுந்த ஒரு கும்பல் சிலையை சேதப்படுத்தியது.
    • தசரா விழா முடிந்த மறுதினம் காளி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டாக்கா:

    அண்டை நாடான வங்காள தேசத்தில் கடந்த சில வருடங்களாக ஹிந்து கோயில்கள் உட்பட சிறுபான்மையின வழிபாட்டு தலங்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், வங்காள தேசத்தின் ஜெனைடாவில் காளி கோயில் அமைந்துள்ளது. தசரா விழா முடிந்து நேற்று காலை கோயில் நிர்வாகத்தினர் திறந்தனர்.

    அப்போது அங்குள்ள காளி சிலை பல துண்டுகளாக உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சிலையின் துண்டுகளை மர்ம நபர்கள் வீசியிருந்தனர்.

    தகவலறிந்து போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தசரா விழா நிறைவடைந்த மறுநாள் காளி சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    • மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர்.


    செஞ்சி பிரசித்தி பெற்ற ராஜகிரி மற்றும் கிருஷ்ணகிரி கோட்டைகள் உள்ளன. ராஜகிரி கோட்டையின் மேல் பகுதியில் பிரசித்தி பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலயம் உள்ளது. இந்த கோவிலில் கமலக்கண்ணி அம்மன் சிலை உள்ளது. நள்ளிரவு சமயம் மர்ம நபர்கள் அந்த கோவிலில் உள்ள சிலையின் கை மற்றும் கால்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.வழக்கம் போல் பூஜைக்கு சென்ற பூசாரி ராமச்சந்திரன் இதனை பார்த்து கோட்டை அலுவலருக்கும் அறங்காவலர் அரங்க ஏழுமலைக்கும் தகவல் தெரிவித்தார்.

    தகவல் அறிந்த செஞ்சி பீரங்கி மேடு பகுதி மக்கள் செஞ்சி கோட்டைக்கு திரண்டனர். அவர்கள் இந்த சம்பவத்தை கண்டித்து செஞ்சி கோட்டை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.மேலும் இது குறித்து அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் செஞ்சி கோட்டை அலுவலர் நவீந்திரா ரெட்டி ஆகியோர் செஞ்சி போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில் யாரோ மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவோ நேற்று அதிகாலையோ கோட்டையில் உள்ள கமலக்கண்ணி அம்மன் சிலையை சேதப்படுத்தி உள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடித்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து செஞ்சி போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். கோட்டை கோவிலில் உள்ள சிலை உடைக்கப்பட்டது இப்பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×