என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவி கண்டிப்பு"
- டந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார்.
- மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள லக்கூர் நடுத்தெருவை சேர்ந்தவர் சாமிநாதன். (வயது 32). கூலி தொழிலாளி. அவரது மனைவி தீபா. கடந்த சில நாட்களாக சாமிநாதன் வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊர்சுற்றி வந்தார். இதனை அறிந்த அவரது மனைவி தீபா நேற்று இரவு கண்டித்தார். இதனால் மனமுடைந்த சாமிநாதன் திடீர் என வீட்டை விட்டு மாயமானார். இரவு முழுவதும் தனது கணவர் வீடு திரும்பாததால் தீபா அதிர்ச்சி அடைந்தார். உடனே உறவினர்கள் உதவியுடன் தீபா தனது கணவரை தேடினார். எங்கு தேடியும் கிைடக்கவில்லை.
இன்று காலை அந்த பகுதியில் உள்ள விைள நிலத்தில் சாமிநாதன் பிணமாக கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல்அறிந்த ராமநத்தம் போலீசார் விரைந்து சென்று சாமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விசார ணையில் சாமிநாதன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிய வந்தது.
- மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
- சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார் (வயது 29) கூலி தொழிலாளி, இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று குடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்பொழுது இவரது மனைவி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி குடும்பம் நடத்துவது என கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தனது பருத்தி வயலுக்குச் சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்ததார். இதனை கண்ட அக்கம்,பக்கத்தினர் இவரை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்து போனார். இது குறித்து இவரது மனைவி தேவகி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்