என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Decline in power generation மின்"
- தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது.
- மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது.
சேலம்:
தமிழக்தில் மழை, தொடர் விடுமுறையால் மின் தேவை குறைந்த நிலையில், காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்தால், கடந்த ஞாயிறு அன்று அனல் மின்நிலையங்களில் மின் உற்பத்தி 90சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரி யாக 8000 மெகாவாட் முதல் 12000 மெகாவட் வரை, மின் தேவை இருந்து வருகிறது. மின் தேவையை பூர்த்தி செய்ய அனல் மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள், காற்றாலை மின்சாரம், சூரிய மின் சக்தி, அணு மின் நிலையங்கள், மத்திய தொகுப்பு ஆகியவற்றில் இருந்து, தேவைக்கேற்ப மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, மழைக்காலம் என்பதால் விவசா யத்திற்கான மின் தேவை
வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 19ந் தேதி கோகுலஷ்டமி விடுமுறை தொடங்கி, நேற்று முன்தினம் (21ந் ேததி) வரை தொடர் விடுமுறையாக அமைந்தது. இதனால், பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரும்பா லும் கடந்த 3நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதுபோன்ற காரணங்களால், தமிழக அனல் மின் நிலையங்களில் 21ந் தேதி மின் உற்பத்தி 90 சதவீதத்திற்கும் மேல் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகத்தில், வட சென்னையின் முதல் பிரிவு அனல் மின் நிலை யத்தில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 3 அலகுகள், 2வது பிரிவில் தலா 600 மெகா வாட் திறன் கொண்ட 2 அலகுகள், தூத்துக்குடியில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5அலகுகள், மேட்டூரில் தலா 210 மெகா வாட் திறன் கொண்ட 4 அலகுகள், 600 மெகா வாட் திறன் கொண்ட ஒரு அலகு என மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் உள்ளது. இந்நிலையில் கடந்த 21-ம் தேதி காற்றாலைகளில் 5000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் கிடைத்தது.
இந்நிலையில், தொடர் விடுமுறையால் அலுவலகங்கள், தொழிற்சாலைகளில் மின் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. மழை காரணமாக, விவ சாயத்திற்கான மின் தேவையும் குறைந்தி ருக்கிறது. இதுபோன்ற காரணங்களால், வட சென்னை முதல் பிரிவில் 210மெகா வாட் அலகில் மட்டுமே மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. வட சென்னை 2-வது பிரிவு, தூத்துக்குடி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் அனைத்து அலகுகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
அனல் மின் நிலையங்களில் மொத்தம் 4320 மெகா வாட் மின் உற்பத்தித்திறன் இருந்தும், மின் தேவை குறைந்ததால், சராசரியாக 200 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.
பணி நாளான நேற்று மதியம் வரையிலும் கூட மின்தேவை அதிகரிக்கா மல் இருந்தது. பின்னர் வட சென்னையில் 600 மெகா வாட் அலகில் ஒன்று, தூத்துக்குடியில் 2அலகுகள், மேட்டூரில் 210 மெகாவாட் அலகுகள் 2என படிப்படியாக அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, மாலையில் மின் உற்பத்தி 1000 மெகா வாட்டாக அதிகரிக்கப்பட்டது. தேவைக்கேற்ப மின் உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்