search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனுநீதி நாள் முகாம். PETITION JUSTICE DAY CAMP"

    • அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
    • பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.

    ஊட்டி,

    கூடலூர் அடுத்துள்ள பாடந்தொரையில், மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமுக்கு கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா தலைமை தாங்கி அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அவற்றை பெறுவது குறித்தும் விளக்கமளித்தாா். முகாமில் தாசில்தார் சித்தராஜ், கூடலூா் டி.எஸ்.பி,.மகேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    இதில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கான ஆணையை கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வழங்கினாா்.தேவா்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் முகமது இப்ராகிம், தலைவா் வள்ளி, துணைத் தலைவா் யூனஸ் பாபு பொதுமக்கள் உள்பட பலா் முகாமில் கலந்து கொண்டனா்.

    • திருநெடுங்குளம் ஊராட்சியில் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.
    • முகாமில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித் தொகை, உழவர் அட்டை ,குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்தட்ட உதவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    திருச்சி :

    திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சியில் திருநெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஸ்ரீநிதி சதீஷ்குமார் முன்னிலையில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    முகாமில் பொதுமக்களிடம் பல்வேறு மனுக்கள் பெறப்பட்டு உரிய துறைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோட்டாட்சியர் தவச்செல்வம் எடுத்துரைத்தார் .

    இந்த முகாமில் 43 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகை, விதவை மறுவாழ்வு உதவித் தொகை, உழவர் அட்டை ,குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வழங்கப்பட்டது.

    மேலும் இந்த முகாமில் அங்கன்வாடி குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து குறைபாடுகளை எடுத்துரைக்கும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது

    ×