search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆட்கள்"

    • வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.
    • ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசரகால மருத்துவ உதவியாளர் பணி யிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) திருச்சி சாலையில் பழைய நீதிமன்ற வளா கத்தில் அமைந்துள்ள 108 ஆம்புலன்ஸ் அலுவல கத்தில் நடைபெற உள்ளது.

    மருத்துவ உதவியாளர்க ளுக்கு பி.எஸ்.சி. நர்சிங், அல்லது ஜி.என்.எம், ஏ.என்.எம், டி.எம்.எல்.டி, அல்லது ( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) லைப் சையின்ஸ் பட்டதாரி, பிஎஸ்சி ஜுவாலஜி, பாட்டனி பையோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, இவைகளில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும். ஆண் பெண் இரு பலரும் கலந்து கொள்ளலாம்.

    மருத்துவ உதவியா ளர்கான பணிக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முக உடற்கூரியல் முதலுதவி அடிப்படை செவிலியர் பணி தொடர்பான தேர்வு, மனிதவளத்துறை நேர்முகத் தேர்வுகள் நடைபெறும். ஊதியம் ரூ.15,435 மொத்த ஊதியமாக வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட வர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சி காலத்தில் தங்கும் வசதி செய்து தரப்படும். வேலைவாய்ப்பு முகாமுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை அனைத்தையும் நேரில் கொண்டு வர வேண்டும் என்று 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன.
    • 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    அவிநாசி :

    அவிநாசி வட்டாரத்தில் 92 பிரதான அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் 12 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 32 சிறியஅங்கன்வாடிகளில் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள இடங்களுக்கு அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்களுக்கே கூடுதல் பொறுப்பும் வழங்கப்படுகிறது.

    இதனால் பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கிறது. சில நேரங்களில் அங்கன்வாடியில் உள்ள சமையலர் விடுப்பு எடுத்து விட்டால், அங்கன்வாடி பணியாளர்களே கூடுதலாக சமையல் வேலையையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இதனால் குழந்தைகளுக்கான கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்படுகிறது.குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் மற்றும் உடல்நலன் சார்ந்து அங்கன்வாடி மையங்கள் செயல்பட வேண்டிய நிலையில் இது அரசின் முதன்மை திட்டமாக பார்க்கப்படுகிறது.

    இருப்பினும் தேவைக்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் திட்டத்தின் நோக்கம் எதிர்பார்த்த பலன் தருவதில் சிக்கல் உள்ளது.இது குறித்து அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் கூறுகையில், திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி மாநிலம் முழுக்க அங்கன்வாடி பணியாளர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பினால் மட்டுமே திட்டத்தின் நோக்கம், முழு அளவில் பலன் தரும் என்றனர்.

    • 35-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதல் ஆட்கள் தேவைப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பல்வேறு இடங்களில் 35க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    இந்நிலையில் இன்று ஒவ்வொரு விநாயகர் சிலையாக சீர்காழி உப்பனாற்றுக்கு கொண்டு செல்கின்ற நிகழ்ச்சி நடந்தது அப்பொழுது சீர்காழி கொள்ளிட முக்கூட்டு பகுதியில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலை கரைக்க கொண்டு வரப்பட்டது.

    விநாயகர் சிலையோடு நான்கு பேர் மட்டுமே வந்ததால் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்கிட கூடுதலாக ஆட்கள் தேவைப்பட்டது.

    இதனால் விநாயகர் சிலை கரைப்பதில் தாமதம் ஏற்பட்டதையடுத்து மேலும் விநாயகர் சிலைகள் வந்த வண்ணம் இருந்ததால் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விநாயகர் சிலையை வாகனத்தில் இருந்து இறக்க தூக்கி சென்று உப்பனாற்றில் சென்று கரைக்க உதவினர்.

    ×