search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேஜை"

    • மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் 3 புதிய வகுப்பறை கட்டிடங்கள்.
    • ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அடுத்த சுவாமிமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 2.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 3 வகுப்பறை கட்டிடங்களை ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

    தொடர்ந்து, கும்பகோணம் பரஸ்பர நிதி லிமிடெட் சார்பில் ரூ. 7.50 லட்சம் மதிப்பில் பள்ளிக்கு 50 மேஜை- பெஞ்சுகளை மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் எம்.பி. வழங்கினார்.

    தொடர்ந்து பொதுமக்கள் நிதி மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 9 லட்சம் மதிப்பில் புதிய கழிவறை திறந்து வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், தி.மு.க. நகர செயலாளர் பாலசுப்பிரமணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாணிக்கம், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், செயல் அலுவலர் உஷா, அரசு வக்கீல் விஜயகுமார், தலைமையாசிரியர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பா ளர்கள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.
    • மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளுக்கு பாபநாசம் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டுநிதியில் இருந்து மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வடக்குமாங்குடி, சித்தர்காடு, அரசு நலப்பள்ளிகள், கொத்தங்குடி, சாலியமங்களம், அம்மாபேட்டை உள்பட 11 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான மேஜை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கலைச்செல்வன், துணைத்தலைவர் தங்கமணி, சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை, நாற்காலி மற்றும் பீரோ ஆகியவற்றை வழங்கினார்.

    அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, வடக்குமாங்குடி ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ், மாவட்ட கவுன்சிலர் ராதிகா, பள்ளி தலைமை ஆசிரியர் சுசிலா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அதேபோல் கொத்தங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு மேசை நாற்காலி வழங்கும் நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் இரா.பழனி முன்னிலை வகித்தார் பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்ரீகலா அனைவரையும் வரவேற்றார்.

    ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாணவர்களுக்கான மேஜை நாற்காலிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார், முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர் பஞ்சாமி, ஆசிரியர் முருகன், ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது.
    • ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பெரிச்சிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் 3 கூடுதல் வகுப்பறைகள் கட்டிட பணிகள் மற்றும் பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.25.408 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி மாணவிகளுக்கான இருக்கைகள் மற்றும் மேசைகள் வழங்குதல் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுதல் பணிகளுக்கு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம்,திருப்பூர் தெற்கு மாநகரச் செயலாளர் டிகேடி. நாகராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்எஸ்ஆர். ராஜ் கலந்து கொண்டனர்.

    ×