search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுண் பஸ்"

    • அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.
    • கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அரசு பணிமனையில் இருந்து தினமும் 85 பஸ்கள் செல்கின்றது. இங்கு வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 55 பஸ்கள், டவுண் பஸ் 30 இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் அந்தியூரில் இருந்து பி-13 என்ற டவுண் பஸ் காலை 8 மணிக்கு அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவிலூருக்கு 8.30 மணிக்கு சென்றடையும்.

    பின்னர் அங்கிருந்து அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவிகள் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வரும் மாணவ ர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் அந்த டவுண் பஸ்சில் காலை 9 மணிக்கு பள்ளி பஸ் நிறுத்தம் வந்தடைவது வழக்கம்.

    மேலும் மாலை 6 மணிக்கு பள்ளி முடிந்து அந்தியூர் பிரிவில் இருந்து மெசக்கவுண்டனூர் வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ -மாணவிகள் சென்று கொண்டிரு க்கின்றனர். இந்நிலையில் அவர்கள் பஸ்கள் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களாக இந்த பஸ் வரவில்லை என அந்த பகுதியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர். அடிக்கடி இந்த பஸ் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் நிலை தவிக்கும் நிலையில் உள்ளது.

    இதனை அரசு கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் காலை நேரத்தில் வரக்கூடிய பஸ் ஏதேனும் பழுது ஏற்பட்டாலோ இல்லை டிரைவர், கண்டக்டர் வரவில்லை என்றாலோ மாற்று பஸ் ஏற்பாடு செய்து அனுப்பி வைக்க வேண்டும் என பொதுமக்கள் போக்குவரத்து துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×