search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்சி லீலைகள்"

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மிகவும் பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

    இந்த தலத்தில் குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று. இங்குள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் சிலை இந்தப் பகுதியில் அமைந்துஉள்ள மிக உயரமான 5½ அடி உயரம் உடையதாகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழாவை யொட்டி திருவிளையாடல் காட்சி லீலைகள் நடந்தன.

    சிவபெருமான் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவிளையாடல் காட்சிகளை அரங்கேற்றினார்.

    கருங்குருவிக்கு உபதேசம் அளித்த காட்சி, நாரைக்கு முக்திஅருளியகாட்சி, மாணிக்கம் விற்றருளிய காட்சி, தருமிக்கு பொற்கிழி வழங்கிய காட்சி, உழவா கோட்டை காட்சி, பாறைக்கு அங்கம் வெட்டிய லீலை காட்சி, வளையல் விற்று அருளிய காட்சி, நரியை பரியாக்கிய காட்சி, பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, விறகு விற்றுஅருளிய காட்சி ஆகிய 10 திருவிளையாடல் காட்சிகளும் நடந்தன. இந்த சிவபெருமானின் திருவிளையாடல் காட்சிகளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    ×