என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்னாள் மாணவர்"
- புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த வெற்றியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கருங்குளம் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 184 மாணவ, மாணவிகள் வந்து படித்து வருகின்றனர்.
மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வர வசதியாக முன்னாள் மாணவர் டாக்டர் முருகேசன், அவரது மனைவி ஜெயலெட்சுமி ஆகியோர் ரூ.27 லட்சத்தில் பள்ளிக்கு புதிய பஸ் வாங்கிக்கொடுத்தனர். இந்த பஸ் தொடக்க விழா சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் செல்வம் வரவேற்றார். புதிய பஸ்சை கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சரஸ்வதி அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்த பஸ்சில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 48 மாணவிகள் அழைத்து வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் இளமாறன் நன்றி கூறினார்.
இதுதொடர்பாக கலெக்டர் கூறும்போது, "மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்கான டீசல் செலவு, டிரைவர் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களை டாக்டர் முருகேசன் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து இருக்கிறார். அவரது சேவையை பாராட்டுகிறேன்," என்றார்.
- நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன்.
- நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் அதே பள்ளியில் 40 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் ஓன்றுகூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். மேலும் ஒருவருக்கொருவர் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் பேசுகையில், எனக்கு தற்போது 88 வயது ஆகிறது. இந்த பள்ளியில் 1983-86ம் ஆண்டுவரை படித்த மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்கள் மிகுந்த கண்டிப்புடன் மாணவர்களை வழிநடத்துவர். எங்களிடம் படித்து முடித்து உயர் பதவிகளை வகிக்கும் மாணவர்களை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினர்.
ஆசிரியர் செல்வி கூறுகையில், நான் இங்கு படித்து தற்போது பொள்ளாச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக உள்ளேன். என்னுடன் இதே பள்ளியில் படித்த நண்பர்களை சந்திப்பது உற்சாகம் தருகிறது என தெரிவித்தார். நாங்கள் படிக்கும் காலத்தில் ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என நினைவலைகளை பகிர்ந்து கொண்ட மயூரா சுப்பிரமணியம், முன்னாள் மாணவர்கள் சந்திப்புக்கு வந்திருந்த அதே ஆசிரியரிடம் பிரம்பை கொடுத்து அடிக்கும்படி கூறினார். இதற்கு முதலில் மறுத்த ஆசிரியர் பின்னர் செல்லமாக பிரம்பால் ஒரு அடி கொடுத்தார். இது அங்கு வந்திருந்த முன்னாள் மாணவ-மாணவிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
- தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
- நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.
அவிநாசி:
அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா் கல்வி அறக்கட்டளை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.தமிழ்நாடு ஓய்வூதியா் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அறக்கட்டளைத் தலைவா் என்.ஆா். பாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சண்முகசுந்தரம், செயலாளா் நடராசன், பொருளாளா் கணேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.செயற்குழு உறுப்பினா்கள் டி.எம்.அருணாசலம், சுப்பிரமணியன் ஆகியோா் சிறப்புரையாற்றினர்.
இதில் நீட் தோ்வு, ஐ.ஏ.எஸ்., டி.என்.பி.எஸ்.சி. ஆகிய போட்டி தோ்வுகளுக்கு சிறப்பு பயிற்சிகளை மாணவா்களுக்கு அளிப்பது, அவிநாசி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்கு அக்டோபா் 3 -ந்தேதி ஊக்கத்தொகை , பரிசுகள் வழங்குவது, அவிநாசி அரசு உயா்நிலைப்பள்ளியில் 1978-ம் ஆண்டு வரை பணியாற்றிய ஆசிரியா்கள், 80 வயது நிறைந்த அறக்கட்டளை உறுப்பினா்கள், ஆண்டுதோறும் கல்வி ஊக்கத்தொகை வழங்குவோா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் நவம்பா் 5-ந் தேதி முப்பெரும் விழா நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.
- மாணவர்கள் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
உடுமலை :
உடுமலை திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 1987-89ம் ஆண்டு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் உடுமலை தனியார் அரங்கில் நடந்தது.
முன்னாள் ஆசிரியர் பயிற்சி மாணவர் தலைவர் பூபதி தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார்.பலரும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் தங்களின் கடந்த கால நினைவுகளை பகிர்ந்து மகிழ்ந்தனர். இதனைத்தொடர்ந்து நல்லாசிரியர் விருது பெற்ற வீராசாமியை அனைவரும் வாழ்த்தினர். துணை ஒருங்கிணைப்பாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்