என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நவராத்திரி கொலு"
- சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
- கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. கவர்னர் மாளிகையில் உள்ள பாரதி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை, கவர்னர் ஆர்.என்.ரவி பொதுமக்கள் பார்வைக்காக நேற்று தொடங்கி வைத்தார். கொலுவை காண கவர்னர் மாளிகை வந்த பொதுமக்களை, கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர். தொடர்ந்து, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், கவர்னர் ஆர்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்று வழிபட்டனர்.
கொலுவில் 5 படிகளில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், ராமர், சீதை, லட்சுமணன், அனுமன், கிருஷ்ணர், திருப்பதி வெங்கடாஜலபதி, அஷ்டலட்சுமி, லட்சுமி, சரஸ்வதி, துர்கை, விஷ்ணுவின் தசாவதாரங்கள், ராகவேந்திரர், நடராஜர், பாண்டுரங்கர், அய்யப்பன், காளி, சாய்பாபா உள்பட சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.
சிறப்பு பூஜை நடைபெற்ற இடத்தில் விநாயகர், அயோத்தி பால ராமர் உள்பட பல்வேறு சாமி சிலைகள் இடம் பெற்றிருந்தன.தொடர்ந்து, நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பாரதி மண்டபத்தில், பாரதி திருமகனின் வில்லிசை பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
கவர்னர் மாளிகையில் வருகிற 12-ந் தேதி வரை கொலு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கொலு வழிப்பாட்டு நிகழ்ச்சியும், மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் தமிழ் கலாசார நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது. இதில், ஏற்கனவே விண்ணப்பித்த பொது மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- இன்று கத்திபோடுதல் நடக்கிறது
- நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்,
கோவை வெள்ளக்கினரில் ஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோயில் அமைந்து உள்ளது. இங்கு தற்போது நவராத்திரி கொலு விழா நடைபெற்று வருகிறது.
இதன்ஒருபகுதியாக கடந்த 15-ந்தேதி தொடங்கிய விழாவில் சிறப்பு பூஜை, அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகம் எடுத்து வந்தனர்.
நேற்று மாலை தச்சந்தோட்டம் பகுதியில் இருந்து சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனை சப்பரத்தில் ஏற்றும் முன்பாக பக்தர்களின் கத்தி போடும் நிகழ்வு நடை பெற்றது.
தொடர்ந்து ஆலங் கொம்பு அழகு வீரக்குமாரர்களின் கத்தி போடும் பரவச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
பின்னர் கோவிலில் தீர்த்தபிரசாதம், தீபாரா தனை, அன்னதானம் நடைபெற்றது. இன்று களர் தோட்டத்தில் இருந்து சாமுண்டி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் வெள்ளை தாமரை வீரகுமாரர்களின் கத்தி போடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.
நவராத்திரி கொலுவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
- இவள் மிகவும் கோபக்காரி. நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
- நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
நவராத்திரி ஒன்பதாம் நாள் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.
தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள்.
முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள்.
இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர்.
இவள் மிகவும் கோபக்காரி.
நீதியை காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
இப்படி நாம் அனைவரும் மகிழ்வாக நவராத்திரிப் பண்டிகை கொண்டாடுவதற்கு பின்னணியில் ஒரு புராணக்கதை உள்ளது.
அசுரர்களை அழிக்க அம்பிகை அவதரித்ததும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்துவிட்டனர்.
அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக ஐதிகம்.
- மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
- சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
நவராத்திரி எட்டாம் நாள் அன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும்.
மனித உடலும், சிம்ம தலையும் உடையவள்.
கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள்.
சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
மூல மந்திரம்: ஓம் – ஸ்ரீம் – நரஸிம்யை – நம
காயத்ரி: ஓம் நரசிம்மாய வித்மஹே வஜ்ர நாகாய தீமஹி தன்னோ நரசிம்மி பிரசோதயாத்!
எட்டாம் நாள் நைவேத்தியம்:- சர்க்கரைப் பொங்கல்.
- ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
- தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.
நவராத்திரி ஆறாம் நாள் சக்தித்தாயை இந்திராணியாக வழிபட வேண்டும்.
இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர்.
இவள் இந்திரனின் சக்தி ஆவாள்.
கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள்.
ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள்.
விருத்திராசுரனை அழித்தவள்.
தேவலோகத்தை பரிபாலனம் செய்பவளும் இவளேயாகும்.
பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
ஆறாம் நாள் நைவேத்தியம்:- வெண்பொங்கல்.
- சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
- இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.
ஐந்தாம் நாளில் சக்தித்தாயை வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும்.
சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள்.
தீயவற்றை சம்ஹரிப்பவள்.
இவளின் வாகனம் கருடன்.
மலர் வகைகளில் மனோரஞ்சிதம் அல்லது பாரிஜாதம் மலர்களையும்,
இலைகளில் திருநீற்றுப் பச்சை இலையும் கொண்டு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்
இந்த நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து அலங்காரம் செய்ய வேண்டும்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம்:- எலுமிச்சை சாதம்.
- பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
- தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.
நவராத்திரி நான்காம் நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபட வேண்டும்.
கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள்.
விஷ்ணு பத்தினியாவாள்.
பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள்.
தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐஸ்வரியங்களையும் தரும் அன்னையாவாள்.
நான்காம் நாள் நைவேத்தியம்:- கற்கண்டு சாதம்.
- இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
- சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
நவராத்திரி மூன்றாம் நாள் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும்.
வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள்.
சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும்.
பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள்.
தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள்.
இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு.
இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- தயிர்சாதம்.
- தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
- சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
நவராத்திரி இரண்டாம் நாள் அன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும்.
மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள்.
தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள்.
ஓங்கார சொரூபமானவள்.
சகல பாவங்களையும் விலக்கிடுபவள்.
வீரத்தை தருபவள்.
இரண்டாம் நாள் நைவேத்தியம்:- தேங்காய் சாதம்.
- திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
- கடின உழைப்பாளிகள் உழைப்பின் பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நவராத்திரி முதலாம் நாள் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.
அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள்.
திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள்.
அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள்.
சர்வ மங்களம் தருபவள்.
தர்மத்தின் திருவுருவம்.
கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
முதல் நாள் நைவேத்தியம்:- புளியோதரை.
- ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
- பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
நல்ல மஞ்சள் நிறமுடைய பழுத்த எழுமிச்சம்பழங்களை வாங்கி அவைகளை இரண்டாக குறுக்கு வசத்தில் அறுத்து சாறு பிழிந்துவிட்டு குப்புறக் கவிழ்த்து கிண்ணம்போல் செய்து கொள்ள வேண்டும்.
அதில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி,
எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.
துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம்பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு சாத்துவார்.
அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும்.
ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும்.
பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றி ஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.
திருமணம் ஆகவேண்டிய பெண்கள் இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும்.
எலுமிச்சம் பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் அந்த ஒளியில் துர்க்காதேவியின் திருமுகத்தை உற்றுப்பாருங்கள்.
தன்னை மறந்து அன்னையின் மீது உங்கள் மனதை ஐக்கியப்படுத்துங்கள்.
மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள்.
அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வு பெறுவீர்கள்.
அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டு சொல்லுங்கள்.
பக்தி பரவசத்துடன் பாமாலைப் பாடி மனமுருகி துதியுங்கள். மன நிம்மதி பெறுவீர்கள்.
தீபாராதனை முடித்து அர்ச்சகர் அர்ச்சனைத் தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார்.
அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும்.
பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு,
அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிது நேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கிவிட்டு வர வேண்டும்.
- பூஜை செய்யும் அறையில் முதலில் சக்தி மாகோலமிட வேண்டும்.
- அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
துர்க்கை அன்னையை வீட்டிலேயே தீப பூஜை செய்ய விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் முறையில் அனுசரித்து வழிபட வேண்டும்.
பூஜை செய்யும் அறையை முதலில் சுத்தமாக கழுவிவிட்டு, அங்கே சக்தி மாகோலமிட வேண்டும்.
அதனை சுற்றி செம்மண் இட்டு அதன்மீது தலை வாழையிலையை போடவேண்டும்.
வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி அதன் நடுவில் ஐந்துமுக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
மஞ்சள் நிறமுடைய பத்து எலுமிச்சம் பழங்களை வாங்கி, பழங்களை இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
அந்த இருபது துண்டுகளில் இரண்டு துண்டுகளை மட்டும் எடுத்து சாறு பிழிந்து விட்டு பிழிந்த முடிகளை உள்பக்கம் வெளிப்பக்கம் வருமாறு திருப்பி குழிவான கிண்ணம் போல் செய்து கொள்ள வேண்டும்.
அந்த எலுமிச்சம்பழக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு ஏற்றி மலர்களால் அலங்கரிக்கப்பட்ட துர்க்கா தேவியின் படத்தின் முன்போ, அல்லது சிலையின் முன்போ வைத்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
துர்க்கா தேவிக்கு நிவேதனைப் பொருளாக தயிர் சாதம், உளுத்துவடை, அவல், பாயாசம், எலுமிச்சம் பழச்சாதம் படைக்கலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்