search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானிலை ஆய்வு மையம் தகவல்"

    • புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
    • காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது.

    தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, 9 துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததை தொடர்ந்து 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டை இறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் மற்றும் தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டினை இறக்கிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    • ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

    சேலம்:

    ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 8.10.2022 மற்றும் 9.10.2022 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்த தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ×