என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
வருகிற 8, 9-ந்தேதி கன மழை பெய்யும்
Byமாலை மலர்6 Oct 2022 2:35 PM IST
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சேலம்:
ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வருகிற 8.10.2022 மற்றும் 9.10.2022 அன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. இந்த தகவலை சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Next Story
×
X