search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திரண்ட சுற்றுலா பயணிகள்"

    • 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது.
    • கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஈரோடு மாவட்டம் மட்டு மின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    மேலும் விடுமுறை நாட்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்படும். இதனால் கொடிவேரி அணை பகுதியில் எப்போதும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

    இந்த நிலையில் கடந்த 2 மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரிக்கு மேல் தொடர்ந்து வெயில் பதிவாகி வருகிறது. கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியாக காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி சுட்டெரித்து வருகிறது. மேலும் பள்ளி விடுமுறை நாட்கள் என்ப தால் சுற்றுலா தலங்கள் மற்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் குவிந்து வருகிறார்கள்.

    இதே போல் கொடிவேரி தடுப்ப ணையிலும் தொடர்ந்து மக்கள் குடும்பத்துடன் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களும் கொடிவேரிக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வந்திருந்தனர்.

    காலை நேரத்தில் பொது மக்களின் கூட்டம் குறைந்து காணப்பட்டாலும் நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. கொடிவேரிக்கு குடும்பம், குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.

    மேலும் வெயிலின் தாக்கத்தால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என பலர் நீண்ட நேரம் கொட்டும் தண்ணீரில் குளித்த மகிழ்ந்தனர்.

    இதனால் கொடிவேரி தடுப்பணை பகுதியில் எங்கு பார்த்தாலும் மக்களின் கூட்டமாக காணப்பட்டது. பொதுமக்கள் கார், வேன், இரு சக்கர வாகனங்களில் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீசார் சரி செய்து அனுப்பி வைத்தனர்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 500 பேர் கொடிவேரி அணைக்கு வந்து குளித்து மகிழ்ந்தனர். இதன் மூலம் ரூ.62 ஆயிரத்து 500 வசூலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பஸ்கள் கிடைக்காததால் அவதி அடைந்தனர்.
    • ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.

    ஊட்டி,

    நீலகிரியில் 2-வது சீசன் தொடங்கியது முதல் இங்கு இதமான காலநிலை நிலவுகிறது.

    இதை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நீலகிரியில் குவிந்தனா். இவா்கள், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனர்.

    பின்னர் குன்னூரில் உள்ள லேம்ஸ்ராக், டால்பினோஸ், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா, கோடநாடு காட்சிமுனை, கேத்ரின் நீா்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை கண்டு ரசித்தனா்.

    காலாண்டுத் தோ்வு விடுமுறை, ஆயுதபூஜை, கா்நாடக மாநிலத்தில் தசரா பண்டிகை என தொடா் விடுமுறை இருந்ததாலும், நீலகிரியில் இரண்டாவது சீசனில் நிகழும் இதமான காலநிலை காரணமாகவும் கடந்த ஒருவாரத்தில் மட்டும் சுமாா் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து சென்றுள்ளனா்.

    இதனால், சுற்றுலாத் தொழிலை நம்பி உள்ளவா்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    விடுமுைற முடிந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஊட்டி பஸ் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் திரண்டனர். அவர்கள் பஸ்சில் இடம் பிடிக்க முண்டியடித்து கொண்டு ஏறினர். எல்லா பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது. குறைந்த அளவே பஸ்கள் இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்ததுடன், வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ×