என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஷேர் ஆட்டோக்களில் தொடரும் விதி மீறல் பயணங்கள்"
- போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
- பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இதுபோன்ற பகுதிகளுக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் இவர்கள் பெரும்பாலும் ஷேர் ஆட்டோ, குட்டியானை போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர சிறுமலை போன்ற மலைகிராமங்களில் இருந்து விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டுவருவதற்கும், அவசர தேவைகளுக்கு செல்வதற்கும் ஷேர் ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர்.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தினந்தோறும் ஏராளமான ஆட்டோக்களில் பள்ளி மாணவ-மாணவிகள் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஓரு ஆட்டோவிற்கு 5 மாணவர்கள் மட்டுமே அழைத்துச்செல்லப்பட வேண்டும் என போக்குவரத்துறை அறிவித்து இருந்தாலும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை மூட்டைகள் போல அடுக்கி வைத்து அழைத்துச்செல்கின்றனர்.
இதேபோல குட்டியானை வாகனங்களில் மாணவ-மாணவிகளும், கூலித்தொழிலாளர்களும் அதிகளவு ஏற்றிச்செல்லப்படுவது தினசரி நிகழ்வாக உள்ளது.
பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இதுபோன்ற விபரீத பயணங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.