search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணம் இரட்டிப்பு மோசடி"

    • மேலும் பலரிடம் கோடிக்கணக்கில் மோசடியா?
    • போலீசார் தொடர்ந்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பல் அறை எடுத்து தங்கி உள்ளனர். மேலும் இவர்களை சந்திப்பதற்காக பல நபர்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருந்தனர்.

    இதுகுறித்து அங் குள்ள பொதுமக்கள் சந்தேகம் அடைந்து நேற்று கன்னியாகுமரி போலீ சாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமை யில் போலீசார்அந்த லாட்ஜிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதில் மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா மெய்யனத்தபட்டி பகுதியை ேசர்ந்த தி.மு.க. முன்னாள் பிரமுகர் சுந்தரபாண்டியன் மற்றும் அவருடன் இருந்த 5 நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் சுந்தரபாண்டியன் தன்னிடம் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் 3 மாதத்தில் 5 மடங்காக ரூ.50 ஆயிரம் கொடுப்போம் என தனக்கு வேண்டியவர்களிடமும், இதற்காகவே உள்ள புரோக்கர்கள் மூலம் தகவல் கொடுத்து கன்னியாகுமரிக்கு வரவழைத்து உள்ளார். இவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி 25- க்கும் மேற்பட்ட நபர்கள் இவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாந்து உள்ளனர்.இவர்கள் தங்கி இருந்த லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆவணங்கள், 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப், உள்பட ரூ.11 லட்சத்தை கைபற்றி உள்ள னர். பின்னர் அவர்கள் 6 பேரையும் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று இதுகுறித்து கன்னியாகுமரிபோலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமை யிலான போலீசார் விசாரணை நடத்தினார்.

    அப்போது இவர்கள் மதுரை மற்றும் பல வெளி மாவட்டங்களில் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டது தெரிய வந்தது.இதில் மேலும் 11 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த சுந்தரபாண்டி மற்றும் 2 பெண்கள் உள்பட 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்துரூ.11 லட்சம் ரொக்க பணம் 3 சொகுசு கார்களையும் லேப்-டாப் மற்றும் முக்கிய ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோல் தமிழ்நாடு முழுவதும் இதே கும்பல் கோடிக்கணக்கில் பணம் இரட்டிப்பு மோசடி செய்து உள்ளார்களா?என்று போலீசார் விசாரணை நடித்திவருக்கிறார்கள்.

    ×