என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேலகிருஷ்ணன் புதூர்"
- கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை
கன்னியகுமரி:
ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காடு புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 50). இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
ராஜதுரை கொத்தனார் வேலை செய்து வருகிறார். வெளியூரில் தங்கிய வேலை செய்து வந்த ராஜதுரை அவ்வப்போது வீட்டிற்கு வருவது வழக்கம்.
கடந்த சில நாட்களாக ராஜதுரை புல்லு விளை உள்ள வீட்டில் வசித்து வந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜதுரை வீடு திரும்பவில்லை.
இதையடுத்த அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை தேடினார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு பகுதியில் இன்று காலை ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாக கிடந்தார்.அவரது உடல் பகுதியில் ரத்த காயங்கள் இருந்தது.அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பிணமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ராஜதுரை கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகே மது பாட்டில்கள் உடைந்து கிடந்தது. மேலும் செங்கற்க ளும் சாலையில் சிதறி கிடந்தன.
எனவே மர்மநபர்கள் ராஜதுரையை செங்க ற்களால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகி றார்கள் .இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட ராஜதுரை மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சகோதரர் கண்ணன் வீட்டில் இருந்த ரூ. 15,000 மதிப்பிலான செல்போனை ராஜதுரை எடுத்துச் சென்றதாக அவரது சகோதரர் கண்ணன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் ராஜதுரை பிடித்து சென்றனர். பின்னர் அவரது மனைவி முருகம்மாள் போலீஸ் நிலையத்திற்கு சென்று செல்போனை விரைவில் வாங்கி தருவதாக கூறியதன் அடிப்படையில் ராஜதுரையை போலீசார் விடுவித்தனர்.
இந்த நிலையில் ராஜ துரை கொலை செய்யப்ப ட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .குடிபோதை தகராறு ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்ய ப்ப ட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்