என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சொந்த ஊர்"
- சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
- ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் பஸ், ரெயில்கள் மூலம் 13 லட்சம் பேர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் உள்ள மொத்த மக்கள் தொகையில் சென்னையில் மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல் வசிக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர், பணி, தொழில் மற்றும் கல்விக்காக சென்னையை வாழ்விடமாக கொண்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர்.
இதுபோன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காக கடந்த 3 நாட்களாக வழக்கமாக இயக்கப்படும் 6 ஆயிரத்து 276 சிறப்பு பஸ்களுடன் கூடுதலாக 7 ஆயிரத்து 740 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14 ஆயிரத்து 86 பஸ்கள் இயக்கப்பட்டன.
இதில், சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பஸ் நிலையங்களில் இருந்து மட்டும் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதலாக 4 ஆயிரத்து 900 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதன் மூலம் சென்னையில் இருந்து மட்டும் கடந்த 3 நாட்களில் சுமார் 5 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று இருக்கின்றனர். முதல் 2 நாட்களில் பெரும்பாலானோர் சென்னையில் இருந்து சென்றுவிட்டதால் நேற்றைய தினம் குறைவான எண்ணிக்கையிலேயே மக்கள் பயணித்தனர்.
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களை போல, தனியார் ஆம்னி பஸ்களும் கடந்த 3 நாட்களில் அதிக அளவில் இயக்கப்பட்டுள்ளன. இதிலும் பலர் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளனர்.
அந்த வகையில் கடந்த 28-ந் தேதி 1,025 ஆம்னி பஸ்களில் 41 ஆயிரம் பயணிகளும்,29-ந்தேதி 1,800 ஆம்னி பஸ்களில் 72 ஆயிரம் பயணிகளும், 30-ந்தேதி (அதாவது நேற்று) 1,600 ஆம்னி பஸ்களில் 64 ஆயிரம் பயணிகளும் என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரம் பேர் பயணித்து இருப்பதாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
என்னதான் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும், ரெயிலில் சொகுசாக பயணம் செய்வது போன்ற அனுபவம் வேறு எதிலும் வராது என்று சொல்லும் அளவுக்கு தீபாவளி பண்டிகைக்கு 120 நாட்களுக்கு முன்னதாகவே முன்பதிவு செய்து கடந்த 28, 29, 30-ந்தேதிகளில் பயணிகள் பலர் பயணம் செய்து இருக்கின்றனர்.
அதிலும் ஒவ்வொரு ரெயிலிலும் இணைக்கப்பட்ட முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளில் ஏறி பயணிக்க ரெயில் புறப்படுவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே சென்று காத்திருந்து ரெயில் வந்ததும் ஓடிச் சென்று, முண்டியடித்து இடத்தை பிடித்தனர். இருக்கை கிடைக்காதவர்கள் கீழே அமர்ந்தபடியும், நின்றபடியும் பயணித்தனர். அந்த வகையில் ரெயில்கள் மூலம் சுமார் 5 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பயணித்ததாக சொல்லப்படுகிறது.
மொத்தத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து பஸ், ரெயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதுதவிர பலர் சொந்த கார்களிலும், வாடகை கார்களிலும், மேலும் சில விமானங்களிலும் சென்று இருக்கின்றனர்.
ஆம்னி பஸ்களில் கட்டணக் கொள்ளை தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருப்பதாக பயணிகள் குமுறுகின்றனர்.
அதற்கேற்றாற்போல், தீபாவளி பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்புவதற்கான பயண கட்டணமும் ஆம்னி பஸ்களில் 2 முதல் 3 மடங்கு அதிகமாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக மதுரை- சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ.570 முதல் ரூ.2,100 வரை இருந்த கட்டணம், வருகிற 2, 3-ந்தேதிகளில் ரூ.3 ஆயிரத்து 400 வரை நிர்ணயித்துள்ளனர். இதில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,100-க்கு குறைவாக இல்லை. அதேபோல், திருநெல்வேலி-சென்னைக்கு சாதாரண நாட்களில் ரூ.690 முதல் ரூ.2,400 வரை இருந்த கட்டணம், 2, 3-ந்தேதிகளில் ரூ.1,700 முதல் ரூ.3,800 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
- திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
- அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது.
திருப்பூர்:
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களும் பணியாற்றுகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை போல் தேர்தல்களுக்கும் சொந்த ஊர் செல்வது வழக்கம்.
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே சொந்த தொகுதிகளில் நடக்கும் தேர்தல் பிரசாரத்தை தினமும் கேட்டறிந்து வந்தனர். திருப்பூரில் நீண்ட நாட்களாக வசித்தாலும் பெரும்பாலா னவர்களுக்கு சொந்த ஊர்களில் வாக்காளராக உள்ளனர்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் நேற்று நிறைவு பெற்றதுடன் நாளை ஓட்டு ப்பதிவு நடக்கப்போகிறது. இதையடுத்து சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய ஏதுவாக, திருப்பூர் பனியன் தொழிலாளர்கள் இன்று சொந்த ஊர்களுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். குழந்தைகளுக்கு பள்ளி கோடை விடுமுறை என்பதால் குடும்பத்துடன் பயணிக்கின்றனர். சிலர் ஒரு மாதத்துக்கு முன்ன தாகவே, பஸ், ரெயில்களில் புக்கிங் செய்துவிட்டனர். இதனால் நேற்றிரவு மற்றும் இன்று காலை திருப்பூர் ரெயில், பஸ் நிலையங்களில் பனியன் தொழிலாளர்கள், பயணிகள் கூட்டம் அலைமோதியது.
தேர்தல் காரணமாக, தொழிலாளர்கள் வெளியே செல்வதும், வருவதுமாக இருப்பதால் கடந்த சில வாரங்களாக பின்னலாடை உற்பத்தியும், ஜாப் ஒர்க் நிறுவனங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல அடுத்த கட்டமாக வடமாநிலங்களிலும் தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கப்போகிறது.
திருப்பூரில் மட்டும் 21 மாநிலங்களை சேர்ந்த 2.50 லட்சம் தொழிலாளர் உள்ளனர். இவர்கள் தேர்தலில் ஓட்டளிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல உள்ளனர். இதன்காரணமாகவும், பெரும்பாலான பனியன் நிறுவனங்களில் வழக்கமான உற்பத்தி மற்றும் பிராசசிங் பணிகள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
வெளிமாவட்ட தொழிலாளர்கள் குடும்பமாக சொந்த ஊர் செல்கின்றனர். ஏற்கனவே சிலர் சென்றுவிட்டனர். பள்ளி கோடை விடுமுறை என்பதால் 10 நாட்களுக்கு பின் திருப்பூர் திரும்புவர். வடமாநில தொழிலாளர்கள் 20ந்தேதிக்கு பின், திருப்பூரில் இருந்து அந்தந்த மாநில தேர்தல் வாக்குப்பதிவுக்கு புறப்படுவார்கள். இதன் காரணமாக பின்னாலடை உற்பத்தி குறையும். அவசரமாக அனுப்ப வேண்டிய கோடை கால ஆர்டர்கள் சென்றுவிட்டதால் உற்பத்தியை குறைப்பதில் பிரச்சினை இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- பெரியசாமி அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே வி.அலம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. கூலி தொழிலாளியான இவர் இன்று அதிகாலை விருத்தாசலத்தில் இருந்து சொந்த ஊரான வி.அலம்பலம் கிராமத்திற்கு செல்ல நைனார்பாளையம் கிராமம் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த கீழ்குப்பம் போலீசார் பெரியசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார்.
- இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி:
திருநந்திக்கரை வியாலிவிளையைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். 2 பேரும் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்கள்.இவரது மகன் விஜய் (வயது 24).
கடந்த 2020-ம் வருடம் இந்திய ராணுவத்தில் சேர்ந்த இவர் பயிற்சி முடித்து பஞ்சாப் ரெஜிமென்டில் பணி செய்து வந்தார். கடந்த 4 -ந் தேதி (வெள்ளிக்கிழமை) இவர் சொந்த ஊருக்கு ரெயிலில் வந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை மராட்டிய மாநிலம் சந்திரப்பூர் மாவட்டம் பத்ராவதி என்ற இடத்தில் ரெயில் தண்டவாளம் பகுதியில் ரத்தவெள்ளத்தில் இவர் உயிரிழந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், அவரது சடலம் பத்ராவதி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவரது குடும்பத்தினருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
இந்த தகவலை கேட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து விஜயின் மூத்த சகோதரரும், ராணுவ வீரருமான விஷ்ணு நேற்று முன்தினம் இரவு சம்பவ நடந்த பத்ராவதிக்கு கிளம்பிச் சென்றார். இந்நிலையில் விஜயின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று காலையில் திருவனந்தபுரம் வழியாக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று இவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்