search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிநவீன ரோந்து"

    • படகுகளில் போலீசார் பாதுகாப்பு ஒத்திகை
    • தீவிரவாதிகள் போல் தப்பிசெல்ல முயன்ற 4 பேர் பிடிபட்டனர்

    கன்னியாகுமரி:

    கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாட்டில் உள்ள 13 கடலோர மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்- ஒழுங்கு போலீ சாரும் இணைந்து "சீ விஜில்" என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை நேற்று நடத்தினர்.

    இன்று 2-வது நாளாக கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 2 அதிநவீன ரோந்து படகுகள் மூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாரன் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியா குமரி முதல் குளச்சல் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதான புரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்த மான சோதனை சாவடி களில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையில் கன்னியா குமரி கடலோர பாது காப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான படையினர் கன்னியா குமரி வாவத்துறை கடற்கரை பகுதி யில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது 4 பேர் கடற்கரை வழியாகதீவிரவாதிகள் போல் நடித்து ஒரு படகில் தப்பிசெல்ல முயன்றனர். அவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் அவர்களிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர்.அப்போது அவர்கள் யார்? என்பது தெரிய வந்தது. அதில் 2 பேர் கமாண்டோ படையைச் சேர்ந்த போலீ சார் என்பதும் ஒருவர் இந்திய கடலோர காவல் படையை சேர்ந்தவர் என்பதும் மற்றொருவர் எஸ்.பி.எப்.கமாண்டோ படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் என்பதும் தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கடல் வழியாக படகில் தப்பி செல்ல முயன்ற அவர்களை கண்காணித்து பிடித்த கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புகுழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீனை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டி னார்கள்.

    குளச்சல் கடற்கரை சோதனைச்சாவடியில் மரைன் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் ததேயூஸ் குமார், சட்டம் ஒழுங்கு சப் - இன்ஸ்பெக்டர் மோகன் ஜோஸ்லின் ஆகியோர் தீவிர வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அந்த வழியாக சென்ற கார், ஆட்டோ, பைக் மற்றும் மீன் லாரிகள் ஆகியவற்றையும் தீவிர சோதனைக்கு பின்பே கடற்கரையில் அனுமதித்தனர்.இதனால் அப்பகுதியில் வாகனம் ஓட்டி வந்த பொதுமக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    ×