என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மளிகை கடைக்காரர்"
- திருச்சுழி அருகே புகையிலை பொருள் பதுக்கி விற்ற மளிகை கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- கோர்்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள சித்தலக்குண்டு பகுதியில் உள்ள மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உத்தரவின் பேரில் திருச்சுழி இன்ஸ் பெக்டர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ் பெக்டர் முத்துக்குமார் அடங்கிய தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்குள்ள மளிகைக்கடையில் கணேஷ் புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் 20 கிலோ புகையிலை பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் மளிகை கடை உரிமையாளர் தெற்குத்தெரு பகுதியை சேர்ந்த முருகேசனை(42) கைது செய்தனர். பின்னர் அவர் கோர்்ட்டில் ஆஜர்ப டுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
- மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் சென்று விட்டார்.
- வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
ஈரோடு,
ஈரோடு ஸ்டோனி பாலம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செல்வன். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வீடு ஸ்டோனி பாலம் ஓடையோரம் சந்து பகுதியில் உள்ளது. அருள்செல்வன் வீடு ஓட்டு வீடாகும்.
இந்நிலையில் அருள்செல்வன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியுடன் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக வெளியூர் சென்று விட்டார். இன்று காலை அருள் செல்வன் மீண்டும் வீட்டுக்கு வந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
பீரோ திறக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் பீரோவை பார்த்தபோது அதில் 20 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார். வீட்டை சுற்றி பார்த்த போது வீட்டின் ஓட்டை பிரித்து மர்ம நபர்கள் உள்ளே இறங்கி துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் நோட்டமிட்டு கைவரிசை காட்டியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பகுதியில் பொருத்த ப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். அருள்செல்வனுக்கு தெரிந்தவர்கள் யாராவது இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர்.
- குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின.
அவினாசி :
அவினாசி அருகேயுள்ள உப்பளிப்பாளையத்தில் மதியழகன் (வயது38) என்பவர் மளிகை கடத்தி வருகிறார். இவர் கடையில் வைத்து குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக புகையிலை தடுப்பு தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனிப்பிரிவு டி.எஸ்.பி நரசிம்மன் தலைமையிலான போலீசார் உப்பளிப்பாளையத்தில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்கள் குவியல் குவியலாக 500 கிலோ சிக்கின. அதனை பறிமுதல் செய்த போலீசார் மதியழகனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்