என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குட்கா வியாபாரி"
- போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
- காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
திருச்சி:
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் பள்ளி மற்றும் கல்லூரி பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் சமூக விரோத செயல்களை தடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வரும் காளிமுத்து என்பவர் குட்கா வியாபாரிகளிடம் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி போலீஸ்காரர் காளி முத்துவை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வந்தனர்.
- 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம்திண்டிவனம் கிடங்கல் 2 அம்பேத்கார் தெருவை சேர்ந்தவர் சேர்ந்தவர் பகவான் (வயது 51). இவர் கிடங்கள் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை விற்று வருவதாக திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தாவிற்கு ரகசிய தகவல் வந்தது. இதை தொடர்ந்து திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான போலீசார் அவர் கடையில் அதிரடியாக நுழைந்து சோதனை செய்தனர் அதில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் குட்கா விற்பனை செய்வதாக கண்டறியப்பட்டு பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை செய்து வருகின்றனர் அதேபோல திண்டிவனத்தில் பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல நாட்களாக குட்கா விற்பனை செய்வதும் தெரிய வந்துள்ளது.
- ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
- ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிப்பு
ஊத்துக்கோட்டை:
தமிழக அரசு குட்கா,புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்ரடெண்ட் சி.பாஸ் கல்யாண் உத்தரவின் பேரில் சிறப்பு காவல்படை போலீசார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா,புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தீவிரமாக கண்காணிக்க வருகின்றனர்.
இந்நிலையில்,நேற்று மாலை சிறப்பு காவல் படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவா,முருகவேல்,தலைமை காவலர்கள் கமலக்கண்ணன்,தமிழரசன் ஆகியோருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஆரணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னம்பேடு கிராமம்,பெரிய காலனி அருகே வாகனங்களை கண்காணித்து வந்தனர்.
அப்பொழுது அவ்வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு பையில் இருபது கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் பொன்ராஜ் (வயது48) என்பதும், திருவள்ளூர் அருகே உள்ள கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
மேலும் சின்னம்பேடு ஏரியில் குட்கா,புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து பல்வேறு கடைகளில் விற்பனை செய்வதையும் அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து ஏரியில் பதுக்கி வைத்திருந்த குட்கா,புகையிலை உள்ளிட்ட 180 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் அந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்த ஆரணி காவல் நிலைய போலீசார், வழக்கு பதிவு செய்து, குட்கா வியாபாரி பொன்ராஜை கைது செய்ததுடன், பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்