என் மலர்
நீங்கள் தேடியது "ஆதார் பூனாவாலா"
- ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம், டிஎஸ் குரூப் உடன் சேர்ந்து கையகப்படுத்தியுள்ளது.
- மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது.
ஆதார் பூனவாலாவின் சனோடி பிராப்பர்ட்டிஸ் மற்றும் ரைசிங் சன் ஹோல்டிங்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தன. இந்த நிறுவனத்தை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் (டிஎஸ் குரூப்) அகியவை கையகப்படுத்தியுள்ளன.
4500 கோடி ரூபாய்க்கு ஆயுர்வேத நிறுவனம் மற்றும் தரம்பால் சத்யபால் குரூப் மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது. இது ஒழுங்குமுறையின் ஒப்புதலை பொறுத்து நடைமுறைப் படுத்தப்படும்.
மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் பல்வேறு பிரிவில் 70-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை கொண்டுள்ளது. பொது காப்பீட்டுத் துறையில் உள்ள அனைத்து முக்கிய காப்பீட்டையும் வழங்குகிறது. மாக்மா ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் செலிகா டெவலப்பர்ஸ் மற்றும் ஜகுவார் அட்வைசரி சர்வீசஸ் ஆகியவற்றையும் ராம்தேவ் நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
- டெல்லியில் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
- மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல்.அரோரா, உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஆதார் பூனாவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது பரவிவரும் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சீரம் தடுப்பூசி நிறுவன சி.இ.ஓ. ஆதார் பூனாவாலா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதார் பூனாவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.