search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருட்டு முயற்சி"

    • வீடு புகுந்து திருட முயற்சி
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி, பாலாற்றங்கரையோரம் உள்ள சத்யா நகர் ,ஓசி பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி டிவோட்டி (வயது 30). இவர் குழந்தைகளுடன் சத்யா நகரில் வசித்து வருகின்றனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் கொள்ளையன் ஒருவன் டிவோட்டியின் வீட்டின் மதில் சுவர் ஏறி உள்பக்கமாக குதித்தார். அப்போது தெருவில் இருந்த நாய்கள் கொள்ளையனை பார்த்து குறைத்தன.

    சத்தம் கேட்ட டிவோட்டி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தார்.

    அப்போது அங்கிருந்த கொள்ளையனை பார்த்து டிவோட்டி கத்தினார். இதனால் பதறிப்போன கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடினார்.

    இது குறித்து டிவோட்டி விருதம்பட்டு போலீசில் புகார் செய்தார். காட்பாடி டிஎஸ்பி பழனி மற்றும் விருதம்பட்டு போலீசார் டிவோட்டியின் வீட்டிற்கு சென்று அவரது வீட்டின் முன்பாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் தெருவில் பெரிய கம்புடன் கொள்ளையன் வருகிறான். அவனை பார்த்து குறைக்கும் நாய்களை கம்பால் விரட்டி விரட்டி தாக்கியுள்ளார். அதற்கு பிறகு வீடு புகுந்து திருட முயன்றுள்ளார். இந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனால் அந்த பகுதி மக்கள் திக்..திக்... மன நிலையில் உள்ளனர்.

    • வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார்.
    • இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த பாவந்தூர் தக்காவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ராஜ்குமார்(37). இவர் சம்பவத்தன்றுஇரவு வீட்டின் முன்புறம்தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை திறக்கும் சத்தம் கேட்டு ராஜ்குமார் திடுக்கிட்டு எழுந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் வீ்ட்டின் கதவை திறந்து திருட முயற்சித்துக்கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் 2 மர்ம நபர்களையும் துரத்தி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னா த்தூர் மெயின்ரோட்டை சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேஷ்(36), ஆறுமுகம் மகன் விஜய்(30) என்பதும் இருவரும் திருடுவதற்காக வீட்டின் கதவை திறக்க முயன்றபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஒப்ப டைத்தனர். பின்னர் இது குறித்த புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேஷ், விஜய் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    • செல்போன் கடையில் திருட்டு முயற்சி நடந்துள்ளது.
    • போலீசார் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்

    பெரம்பலூர்

    பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு சேவா நகரை சேர்ந்தவர் கனகராஜன். இவரது மகன் மணிகண்டன் (வயது 27). இவர் பெரம்பலூர் ரோவர் பள்ளி செல்லும் சாலையோரத்தில் உள்ள வாடகை கட்டிடத்தில் கடந்த 6 மாதங்களாக செல்போன் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் நேற்று காலை கடையை திறக்க வந்த போது, கடை ஷட்டர் கதவின் 2 பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கடையின் உள்ளே சென்று பார்த்தபோது ஏதும் திருடு போகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


    ×