என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தேங்காய் விலை"
- குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள்.
- தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தேங்காய் முக்கிய உணவு பயிராக உள்ளது. இங்கு தென்னந்தோப்புகள் அதிகம் உள்ளன. அதிலும் ஈத்தாமொழி தோங்காய் என்றால் மவுசு அதிகம். இங்குள்ள உயரமான தென்னை மரங்கள் குமரியின் பாரம்பரிய சிறப்பிற்கு ஓர் அடையாளமாக விளங்குகிறது. அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி மற்றும் குளச்சல் போன்ற பல்வேறு பகுதிகளில் இந்த பூர்வீக வகை தென்னைமரங்கள் காணப்படுகின்றன.
குமரி மாவட்ட மக்கள் சமையலுக்கு அதிக அளவில் தேங்காய் பயன்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தேங்காய் விலை உயர்ந்து காணப்படுகிறது. கடந்த மாதம் வரை தேங்காய் ஒரு கிலோ ரூ.20 முதல் ரூ.23-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ஒரு கிலோ தேங்காய் மொத்த விற்பனைக்காக வியாபாரிகளிடம் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. சந்தைகளில் கிலோ ரூ.35 க்கு விற்பனையாகிறது. இதனால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி ஈத்தாமொழியை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரி முத்துசரவணன் கூறியதாவது:-
தேங்காய் விளைச்சல் கடந்த 10 ஆண்டில் தற்போது வெகுவாக குறைந்துள்ளது. முன்பு ஒரு எக்டருக்கு 250 தென்னைகள் பயிரிட்டால் அதில் சுமார் 5 ஆயிரம் தேங்காய் வரை கிடைக்கும். தற்போது அதே 250 தென்னைகளில் இருந்து சுமார் 1000 முதல் 1,500 தேங்காய்கள் மட்டுமே கிடைக்கிறது. தற்போது பனி காலம் என்பதால் விளைச்சல் மிகவும் குறைந்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகை வருவதால், தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகரவிளக்கு பூஜை காலத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர்.
- ஒரு பக்தர் அபிஷேகத்துக்கான நெய் தேங்காய் மற்றும் நேர்த்தி கடனுக்கு உடைப்பதற்காக 7 தேங்காய் வரை கொண்டு செல்வார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் தென்னை சார்ந்த விவசாயத்தால் பயன்பெற்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக தேங்காய் மகசூல் குறைந்த போதும், கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.20, ரூ.21 என்ற அளவிலேயே இருந்தது. இதனால் விவசாயிகள் தென்னை பராமரிப்புச்செலவுக்கு கூட வருவாய் கிடைக்காமல் சிரமம் அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தேங்காய் விலை ஏற்றம் கண்டுள்ளது. மகரவிளக்கு பூஜை காலத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிகமான ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்று வருகின்றனர். ஒரு பக்தர் அபிஷேகத்துக்கான நெய் தேங்காய் மற்றும் நேர்த்தி கடனுக்கு உடைப்பதற்காக 7 தேங்காய் வரை கொண்டு செல்வார். இதனால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. மேலும் பொங்கல் நெருங்குவதால் பொங்கல் சீர் வரிசை மற்றும் பண்டிகை கொண்டாட்டத்துக்கு அதிக அளவில் தேங்காய் தேவைப்படுகிறது.
இதன் பொருட்டு மொத்த வியாபாரிகள் தேங்காய்களை அதிக அளவில் கொள்முதல் செய்து வருகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக தினமும் தேங்காய் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. குமரி மாவட்டத்தில் நேற்று ஒரு கிலோ தேங்காய் விவசாயிகளிடம் இருந்து ரூ.28-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. கிலோ ரூ.30-க்கு மேல் வியாபாரிகள் விற்கின்றனர். தேங்காய் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்