search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவரம்பு"

    • மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் உள்ள நாகக்கோடு சந்திப்பில் இருந்து திருவரம்பு வரை உள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை பணிகள் தொடங்கின.

    இதற்காக திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்த சுமார் 2½ அடி ஆழத்தில் ரோட்டோரம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    ஆனால் அதனை செய்யாமல் ஜல்லிக்கு பதிலாக குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து சாலையில் குவித்துள்ளனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் ஆத்திரமடைந்து மோசமான பாறைப்பொடியை இங்கே ஏன் கொட்டுகிறீர்கள்? தரமான ஜல்லியை தான் முதலில் போட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள், கழிவு கலந்த பாறைப்பொடிகளை உடனே அப்புறப் படுத்தச் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாறைப் பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏற்கனவே இந்த சாலை பணியால் திருவரம்பு முதல் நாகக்கோடு வழி யாக சென்று வரும் பஸ்கள் மாற்று பாதையில் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர், மருத்துவமனைக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு மிகவும் சிரம மான நிலை ஏற்படுகிறது.

    போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படு வதால் சுற்று வட்டார மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போதிய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சாலைப் பணியை தரமாக விரைந்து முடித்து போக்குவரத்து வசதி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×